சிகாப்பல்தீன் முகம்மது அல் நசாவி

சிகாப்பல்தீன் முகம்மது அல் நசாவி (பாரசீகம்: شهاب الدین محمد النساوی; இறப்பு அண். 1250) என்பவர் குவாரசமிய ஷா சலாலத்தீன் மிங்புர்னுவின் பாரசீக[1] உதவியாளர் மற்றும் சுயசரிதையாளர் ஆவார். இவர் குராசானில் உள்ள நசா (தற்போதைய துருக்மெனிஸ்தான்) என்ற இடத்தில் பிறந்தார். குராசான் மீது மங்கோலியப் படைகள் தாக்கியதை நேரில் தன் கண்களால் கண்டார். இறுதியாக சலாலத்தீன் தப்பித்து ஓடியது மற்றும் அவரது இராணுவ சாகசங்களை அண். 1241ஆம் ஆண்டு அரபு மொழியில் எழுதினார்.[2] அண். 1234/35இல் பாரசீக மொழியில் 1231ஆம் ஆண்டுக்கு முந்தைய தன் வாழ்க்கையை நப்தத் அல்-மஸ்துர் என்ற நூலில் எழுதியுள்ளார்.[3]

உசாத்துணைதொகு

  1. Manz 2020, ப. 272–273.
  2. Levi, Scott Cameron; Sela, Ron (2010). Islamic Central Asia: An Anthology of Historical Sources. Bloomington, IN: Indiana University Press. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0253353858. 
  3. Jackson 1993, ப. 974.