சிகேவ்டைட்டு
சிகேவ்டைட்டு (Scawtite) என்பது Ca7(Si3O9)2CO3•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கார்பனேட்டைக் கொண்ட நீரேறிய கால்சியம் சிலிக்கேட்டு கனிமமென்று இது வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைச் சரிவச்சு படிகத் திட்டத்தில் மெல்லிய தகடுகளாக அல்லது தட்டையான பட்டகங்களாக சிகேவ்டைட்டு படிகமாகிறது.
சிகேவ்டைட்டு Scawtite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca7(Si3O9)2CO3•2H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக இயல்பு | தட்டை – மைகா போல, கதிரியக்கத்திற்கு இணையானது |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
பிளப்பு | {001} இல் சரிபிளவு, {010} இல் குறைவு |
மோவின் அளவுகோல் வலிமை | 4–5 |
மிளிர்வு | பளபளப்பாக இருக்கும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.77 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.597 - 1.603 nβ = 1.606 - 1.609 nγ = 1.618 - 1.621 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.021 |
2V கோணம் | 74° முதல் 78° என கணக்கிடப்படுகிறது. |
மேற்கோள்கள் | [1][2][3] |
வட அயர்லாந்திலுள்ள சிகேவ்டு மலையில் 1929 ஆம் ஆண்டு முதன் முதலில் சிகேவ்டைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. சுண்ணக்கல் வகை கனிமத்தில் படிவுப்பாறையாகவும், இத்தகைய பாறைகளில் நீர்வெப்ப இழைகளாகவும் சிகேவ்டைட்டு தோன்றுகிறது. மெலிட்டைட்டு, சிபுரைட்டு, தோபர்மோரைட்டு, தாம்சோனைட்டு, லார்னைட்டு, கிராசுலார், பல்டுபோண்டெய்னைட்டு, கால்சைட்டு, அனால்சைம், போசாகைட்டு, இல்லிபிராண்டைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து சிகேவ்டைட்டு காணப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிகேவ்டைட்டு கனிமத்தை Scw[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Scawtite in the Handbook of Mineralogy
- ↑ Scawtite on Mindat.org
- ↑ Scawtite data on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.