சிக்கந்தர் கா முக்கத்தர்

சிக்கந்தர் கா முக்கத்தர் (Sikandar Ka Muqaddar) என்பது நீரஜ் பாண்டே இயக்கிய 2024 இந்திய இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஒரு பெரும் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முனையும் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதில் ஜிம்மி ஷெர்கில், அவினாஷ் திவாரி, தமன்னா பாட்டியா, ராஜீவ் மேத்தா மற்றும் திவ்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஃப்ரைடே ஸ்டோரிடெல்லர்ஸ் பதாகையின் கீழ் சீதல் பாட்டியா இப்படத்தைத் தயாரித்துள்ளார். [2][3] இது நவம்பர் 29,2024 அன்று நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.[4][5]

சிக்கந்தர் கா முக்கத்தர்
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்நீரஜ் பாண்டே
தயாரிப்புசித்தால் பாட்டியா
திரைக்கதை
  • நீரஜ் பாண்டே
  • விபுல் கே. ராவல்
இசைபாயல் தேவ்
நடிப்பு
ஒளிப்பதிவுஅர்விந்த் சிங்
படத்தொகுப்புபிரவீன் கத்திகுலோத்
கலையகம்ஃபிரைடே ஃபிலிம்ஒர்க்சு
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு29 நவம்பர் 2024 (2024-11-29)
ஓட்டம்143 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

கதைச்சுருக்கம்

தொகு

மும்பையில் உள்ள நகைக் கண்காட்சியில் ₹1 கோடி மதிப்புள்ள வைரக் கொள்ளை நடக்கிறது. இக்கொள்ளையில் மங்கேஷ் தேசாய், காமினி சிங் மற்றும் சிக்கந்தர் சர்மா ஆகியோர் முக்கிய சந்தேக நபர்களாக உள்ளனர். காவல் ஆய்வாளர் ஜஸ்விந்தர் சிங், சர்மாவே குற்றவாளி என்று உறுதியாக நம்பி, விசாரணையை நடத்திச் செல்கிறார், ஆனால், அவரால் அதை நிரூபிக்க திடமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட போதிலும், சிக்கந்தரின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. சிக்கந்தர் தனது வேலையை இழக்கிறார், சமூக புறக்கணிப்பை எதிர்கொள்கிறார், மேலும், தனது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் போராடுகிறார். இந்த சவால்களுக்கு மத்தியில், அவர் காமினி என்ற கணவரின்றிக் குழந்தையை வளர்த்து வாழ்ந்து வரும் பெண்ணை மணக்கிறார். தொடக்கத்தில் இருந்தே சிக்கந்தரும் ஜஸ்விந்தர் சிங்கும் முட்டிக் கொள்ள தன்னை அடித்து விசாரிக்கும் ஜஸ்விந்தர் தன்னிடம் ஒரு நாள் மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் இது நடந்தே தீரும் என்று அவரிடம் சூளுரைக்கிறார். இவர்களுக்கிடையிலான மோதல் எப்படி முடிவுக்கு வந்தது? தொடர்புடைய குற்றத்தில் உண்மையான குற்றவாளி யார்? என்பது தான் கதை.

கதையின் முடிச்சு அவிழ்க்கப்படும்போது, திருடப்பட்ட வைரங்களை பிரியாவின் உதவியுடன் பல ஆண்டுகளாக ஒரு போன்சாய் பானையில் மறைத்து வைத்திருந்த சிக்கந்தர் உண்மையில் கொள்ளையில் ஈடுபட்டார் என்பது தெளிவாகிறது. காமினி உட்பட அனைவரிடமிருந்தும் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வைரங்களை மீட்டெடுக்க நீண்ட விளையாட்டு விளையாடினார் என்பதைப் படத்தின் இறுதிக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஒரு பதட்டமான மோதலில், ஜஸ்விந்தர் இறுதியாக சிக்கந்தரைப் பிடிக்கிறார், சிக்கந்தர் வைரங்களை மீட்டெடுத்து ஜஸ்விந்தரை முறியடிக்க முடிந்தாலும், அவர் இறுதியில் கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். இக்கதையின் முடிவு சிலிர்ப்பூட்டும் திடீர் நிகழ்ச்சிகள் அடங்கிய புதுமையான ஒன்றாகவே உள்ளது. இது கதாநாயகர்களின் எதிர்காலம் குறித்தும் மற்றும் நீதி உண்மையிலேயே வழங்கப்பட்டதா? என்பது பற்றியும் கேள்விகளை விட்டுச்செல்கிறது.

நடிகர்கள்

தொகு

  இறுதியான நிலையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்:[6]

  • ஜஸ்வீந்தர் சிங்காக ஜிம்மி செர்கில்
  • சிக்கந்தர் சர்மாவாக அவினாஷ் திவாரி
  • காமினி சிங்காக தமன்னா பாட்டியா
  • மங்கேஷ் தேசாயாக இராஜீவ் மேத்தா
  • கவுசல்யா சிங்காக திவ்யா தத்தா
  • பிரியா சவந்தாக ரிதிமா பண்டிட்

தயாரிப்பு

தொகு

பிப்ரவரி 2024 இல், நெட்ஃபிளிக்ஸ் நீரஜ் பாண்டே மற்றொரு கூட்டுழைப்பை அறிவித்ததுடன் ஒரு நகர்படச் சுவரொட்டி மூலம் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.[7][8] அக்டோபர் 2024 இல் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட “திரைக்குப் பின்னால்“ என்ற தலைப்பிட்ட காணொலியில் நட்சத்திர நடிகர்கள் வெளிப்பட்டனர்.[9]

வரவேற்பு

தொகு

ஃபர்ஸ்ட்போஸ்டின் லச்மி தேப் ராய் படத்திற்கு ஐந்தில் மூன்றரை நட்சத்திரங்களை வழங்கி, "ஜிம்மி ஷெர்கில், தமன்னா பாட்டியா, அவினாஷ் திவாரி நடித்த கொள்ளைச் சம்பவம் குறித்த பரபரப்பூட்டும் படத்தின் கதைக்கரு தனித்துவமானது என்றும் ஒவ்வொரு நடிகரைச் சுற்றியுள்ள கதைக்களம் மற்றும் அற்புதமான நடிப்பு காரணமாக படம் ஒளிர்கிறது" என்றும் கூறியிருந்தார்.[10] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சுப்ரா குப்தா இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருந்தார். இவர், "நீரஜ் பாண்டேவின் நெட்ஃபிளிக்ஸ் படம் பாலிவுட்டில் ஒரு அரிய வகைப்படம் என்றும், நீங்கள் அடுத்தாக நிகழ இருப்பதை ஊகித்தறிய முடியாத திருப்பங்களுடன் உள்ள ஒரு சோதனை முயற்சி" என்றும் கூறியுள்ளார்.[11]

பிலிம்பேர் நிறுவனத்தின் தேவேஷ் ஷர்மா இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கி இத்திரைப்படத்தை “பல திருப்பங்கள் நிறைந்த பரபரப்பூட்டும் திரைப்படம்” என்று விவரித்தார். சில தளர்வான முனைகள், சீரற்ற வேகம் மற்றும் மிகத் தாமதமான இறுதிக்காட்சி இருந்தபோதிலும், ஜிம்மி ஷெர்கில் மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோரின் தனித்துவமான நடிப்பின் காரணமாக இத்திரைப்படம் மெதுவான நகரும் பரபரப்பூட்டும் திரைப்படம் என்று குறிப்பிட்டார். நீரஜ் பாண்டே உளவியல் சார்ந்த பரபரப்பூட்டும் நிகழ்வுகளுடன், இது இவ்வகை திரைப்படங்களின் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைகிறது.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sikandar Ka Muqaddar (12)". British Board of Film Classification. 28 November 2024. பார்க்கப்பட்ட நாள் 29 November 2024.
  2. India Today Entertainment Desk (23 October 2024). "Sikandar ka Muqaddar: Jimmy Sheirgill, Tamannaah promise a thrilling crime-drama". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  3. Web, Statesman (23 October 2024). "'Sikandar ka Muqaddar': Jimmy Shergill, Tamannaah, Avinash Tiwary tease a heist drama". The Statesman. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  4. "Sikandar Ka Muqaddar, starring Jimmy Shergill, Avinash Tiwary, and Tamannaah Bhatia, to stream from November 29 on Netflix". Bollywood Hungama. 7 November 2024. Archived from the original on 8 November 2024. பார்க்கப்பட்ட நாள் 7 November 2024.
  5. HT Entertainment Desk (11 November 2024). "Sikandar Ka Muqaddar trailer: Jimmy Shergill, Tamannaah Bhatia, Avinash Tiwary pull off a diamond heist". Hindustan Times. Archived from the original on 11 November 2024. பார்க்கப்பட்ட நாள் 11 November 2024.
  6. Sikandar Ka Muqaddar (in இந்தி). India: Friday Storytellers. 2024. பார்க்கப்பட்ட நாள் 29 November 2024 – via நெற்ஃபிளிக்சு.
  7. Sundaresan, Satish (29 February 2024). "Netflix India announces Neeraj Pandey's Sikandar Ka Muqaddar... minutes after Khakee: The Bengal Chapter". OTTPlay. Archived from the original on 18 April 2024. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  8. Kundu, Tamal (4 March 2024). "Sikandar Ka Muqaddar Release Date Rumors: When Is It Coming Out?". Yahoo Entertainment. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  9. Hungama, Bollywood (23 October 2024). "Netflix drops FIRST glimpse of Neeraj Pandey's Sikandar Ka Muqaddar featuring Tamannaah Bhatia, Avinash Tiwary and Jimmy Shergill, watch : Bollywood News". Bollywood Hungama. Archived from the original on 12 November 2024. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
  10. Roy, Lachmi Deb (29 November 2024). "Netflix's Sikandar Ka Muqaddar Movie Review: Tamannaah Bhatia, Jimmy Shergill, Avinash Tiwary's heist thriller is filled with suspense". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
  11. Gupta, Shubhra (29 November 2024). "Sikandar Ka Muqaddar movie review: Neeraj Pandey's Netflix film is a rare beast in Bollywood, a pulpy character study with twists you don't see coming". The Indian Express. Archived from the original on 30 November 2024. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
  12. Sharma, Devesh (29 November 2024). "Sikandar Ka Muqaddar Movie Review: A Humane Thriller With Twists Aplenty". Filmfare.com. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.