திவ்யா தத்தா
திவ்யா தத்தா (Divya Dutta)((பிறப்பு 25 செப்டம்பர் 1977) என்பவர் இந்திய நடிகை ஆவார்.[1][2]
திவ்யா தத்தா | |
---|---|
![]() திவ்யா தத்தா 2017-ல் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1977 லூதியானா, பஞ்சாப், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1994–முதல் |
உறவினர்கள் | தீபக் காக்ரி (மாமா) |
வலைத்தளம் | |
divyadutta.co.in |
பிறப்பும் வளர்ப்பும்தொகு
திவ்யா தத்தா இந்தியாவின் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் செப்டம்பர் 25 ,1977-ல் பிறந்தார்.[1][3] இவருடைய தகப்பனார் இவருக்கு ஏழு வயது இருக்கும் போது மரணம் அடைந்ததால், தாயார் மருத்துவர் நளினியின் நிழலில் வளர்ந்தார் .
திரைப்பட வாழ்கைதொகு
இவர் 1994ஆம் ஆண்டு "இசுக் மெய்ன் ஜீனா இசுக் மெய்ன் மர்நா" என்ற இந்தி திரைப்படத்தில் துணை நடிகையாய் தோன்றினார். இதன் பின்னர் பல படங்களில் துணைகதாநாயகியாக வலம் வந்தார் .1999-ல் வெளியான "ஷாகீத் ஈ முபாரட் பூட்டா சிங்" என்ற பஞ்சாபி படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஜாக்கி செராப், நானா படேகர், மனிஷா கொய்ராலா, கோவிந்தா, ஷில்பா ஷெட்டி நடித்த படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த வீர் சாரா, தில்லி 6 திரைப்படங்களில் கூடுதல் கவனம் பெற்று சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினைப் பெற்றுள்ளார். இதுவரை 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[4][5]
பாலிவுட் இயக்குனரான குஷன் நந்தி பாபுமொஷாய் பண்டூக்பாஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். திகில் படமான இப்படத்தில் தத்தா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கான காட்சிகள் எடுப்பதற்காக படக்குழு இலக்னோ சென்றுள்ளது. இங்கு திவ்யா தத்தா இடம் பெற்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வயலில் கடும் வெயில் என்று கூட பாராமல் திவ்யா தத்தா தனது உடல் முழுவதையும் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியில் வைத்து மூன்று மணி நேரம் இருந்துள்ளார். இக்காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக எடுக்கப்பட்டுள்ளது.
சொந்த வாழ்கைதொகு
இவர் ராணுவ வீரர் சந்தீப் என்பாரை மே 2005-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. தன் தாயாரை முன்மாதிரியாக கொண்ட இவர் "நானும் என் அம்மாவும்" என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Divya Dutta's birthday made 'very special' by Shabana Azmi". The Indian Express. Indo-Asian News Service. 25 September 2015. 5 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Divya Dutta: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". The Times of India. 15 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Divya Dutta's mother inspires her Gippi character". NDTV. 10 April 2013. 19 June 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Divya Dutta Biography | Divya's Photos, Movies & Interviews - Yahoo! India Movies". Yahoo!. 16 September 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "YouTube". 10 July 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது – YouTube வழியாக.