சிங்கப்பூரில் அகமதியா

அகமதியா ( மலாய் : Ahmadiyah; தமிழ் : அகமதியா; சீன :阿赫迈底亚) என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதச் சமூகம் ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னர், தன்னை இறைத்தூதர் எனவும் இரண்டாம் கலீபா எனவும் அறிவித்த மிர்சா குலாம் அகமது சகாப்தத்தில் இந்த சமூகம் நிறுவப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) இந்த இயக்கத்தின் முன்னோடி ஆவார். முகம்மது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதராகத் தன்னை இவர் அறிவித்தார். மிர்சாவை இறைத்தூதர் என நம்புவதன் மூலம் முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் என்ற, பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையிலிருந்து அகமதியர்கள் மாறுபடுகின்றனர். இதனால் பல இஸ்லாமிய நாடுகளில் அகமதியர்கள் முஸ்லிம்களாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.[1] அகமதியா குலாம் உசேன் அய்யாஸ் சிங்கப்பூர் பகுதிக்கு அனுப்பப்பட்ட முதல் சமயப் பரப்பாளர் ஆவார், கலீப்பின் வழிகாட்டுதலின் பேரில், 1935 ஆம் ஆண்டில், இந்தப் பிரதேசங்கள் தென்கிழக்காசியாவில் பிரித்தானியக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில் குலாம் உசேன் அய்யாசு இங்கு வந்தார்.[2] 1970 களில், அகமதியா சமூகம் சுமார் 200 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது, இது முஸ்லிம் மக்களில் 1-2% பிரதிநிதித்துவப்படுத்தியது.[3]

சிங்கப்பூரில் உள்ள ஒரே அகமதிய முஸ்லீம் மசூதியான தாகா மசூதி

வரலாறு தொகு

1920 களில், இந்தியாவில் வெளியிடப்பட்ட பல அகமதிய முஸ்லீம் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் சிங்கப்பூர் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக விநியோகிக்கப்பட்டதாக அறியப்பட்டது. விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்தது. இருப்பினும், சிங்கப்பூரில் அகமதியா இயக்கத்தின் முறையான வரலாறு 1935 இல் தொடங்குகிறது, சமூகத்தின் இரண்டாவது கலீபாவான மிர்சா குலாம் அகமது சமயப் பரப்பாளராக குலாம் உசேன் அயாஸை மலாய் தீபகற்பத்தில் உள்ள பல பிரித்தானிய பிரதேசங்களுக்கு அனுப்பினார்.[4] சிங்கப்பூரானது, தீபகற்பத்திற்குள் உள்ள பல பிரித்தானியக் குடியேற்றங்ளில், நவீனகால மலேசிய மாநிலங்களான மலாக்கா மற்றும் பினாங்குடன், நீரிணை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கலீபாவால் உலகம் முழுவதும் அனுப்பப்பட்ட முதல் சமயப் பரப்பாளர்களுள் அய்யாசும் ஒருவர்.

அகமதியாஇயக்கத்தின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, அகமதிய முஸ்லீமாக மாறிய முதல் நபர் ஹாஜி ஜாஃபர் ஆவார், அவர் சிங்கப்பூரில் அய்யாஸ் வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1938 இல் தனது புதிய மத நம்பிக்கையைத் தழுவினார்.[4] சிங்கப்பூரில் இயக்கத்தின் முதல் தலைவரான ஜொகூர் அரச குடும்பத்தின் வழித்தோன்றலான எங்கு இஸ்மாயில் பின் அப்துல் ரஹ்மான் ஆவார். அவரது வாரிசு 1955 இல் பதவியேற்ற ஹமீத் சாலிகின் ஆவார். 1966 ஆம் ஆண்டில், சீனாவின் அன்ஹுய் நகரில் வளர்ந்த அகமதியா முஸ்லீம் சமயப் பரப்பாளரான முஹம்மது ஒஸ்மான் ச 1966 ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டார். 3 ஆண்டுகள் நீடித்த அவரது பதவிக் காலத்தில், அவர் பல அகமதியா புத்தகங்களை மாண்டரின் மொழியில் மொழிபெயர்த்தார், அவற்றில் இஸ்லாத்தின் போதனைகளின் தத்துவம் மற்றும் உண்மையான இஸ்லாமிய அஹ்மதியாத் ஆகியவை அடங்கும் .

சிங்கப்பூரில் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் முதல் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. 121 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, அதன் அண்டை நாடான மலேசியாவுடன் இணைந்து நடைபெற்றது.[4]

அகமதியா சமூகத்தின் நான்காவது கலீபாவான மிர்சா தாஹிர் அகமது செப்டம்பர் 8, 1984 அன்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார். ஒரு வாரம் நீடித்த தனது வருகையின் போது, சிங்கப்பூரில் சமூகத்தின் முதல் மசூதிக்கு அடிக்கல் நாட்டினார், அதற்கு அவர் தாஹா மசூதி என்ற பெயரைச் சூட்டினார்..[4]

ஜூன் 23, 1969 அன்று, சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் ஒரு பத்வாவை வெளியிட்டது, அதில் அகமதியா இயக்கம் இஸ்லாத்திலிருந்து பெருகி வெளியே வரும் ஒழு குழுவாகும் எனக் குறிப்பிட்டிருந்தது.[5][6][7]

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  2. A Messenger of Peace in the Lion City – Khalifah of the Promised Messiahas Visits Singapore. http://reviewofreligions.org/10192/a-messenger-of-peace-in-the-lion-city-khalifah-of-the-promised-messiahas-visits-singapore/. பார்த்த நாள்: December 3, 2016. 
  3. Muslim Puritans: Reformist Psychology in Southeast Asian Islam. https://books.google.com/books?id=tVO2RR6ymjoC&lpg=PA147&pg=PA147#v=onepage&q&f=false. 
  4. 4.0 4.1 4.2 4.3 "History of Ahmadiyya in Singapore". Ahmadiyya Muslim Community of Singapore.
  5. "Narrow escape in Jakarta for 14 Ahmadiyya members from S'pore". The Straits Times. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes20050729-1.2.50.4.15.aspx. 
  6. "Probe on Wayward teachings of Islam". Singapore Monitor. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/singmonitor19821222-3.2.13.5.aspx?q. 
  7. "Ahmadiyah" (PDF). Islamic Religious Council of Singapore. Archived from the original (PDF) on 2019-12-07. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூரில்_அகமதியா&oldid=3924967" இலிருந்து மீள்விக்கப்பட்டது