சிங்கப்பூர் இலிப்போ மையம்
சிங்கப்பூரில் உள்ள ஒரு வானளாவி
இலிப்போ மையம் (Lippo Centre) சிங்கப்பூரின் டவுன்டவுன் கோர் வணிகப் பகுதியில் 78, செண்டன் சாலை என்ற முகவரியில் அமைந்துள்ளது. இம்மையம் 150 மீ (490 அடி) உயரம் கொண்ட வானளாவிய கட்டிடமாகும். 1990 ஆம் ஆண்டு இலிப்போ மையம் கட்டி முடிக்கப்பட்டது. 34 மாடிகள் கொண்ட கட்டிடமாக நிற்கிறது. சிங்கப்பூர் நாட்டின் 43-ஆவது உயரமான கட்டிடமாக தி கேட்வே என்ற 37 மாடிகள் கட்டடத்தின் இரண்டு கட்டிடங்களுடன் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 650 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு கொமர்சு ரியல் என்ற செருமானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
சிங்கப்பூர் இலிப்போ மையம் Lippo Centre 力寶中心 | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவு |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | செண்டன் சாலை, சிங்கப்பூர் |
ஆள்கூற்று | 1°16′23.03″N 103°50′40.38″E / 1.2730639°N 103.8445500°E |
நிறைவுற்றது | 1990 |
செலவு | $35 மில்லியன் |
உயரம் | |
கூரை | 150 m (490 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 34 |
உயர்த்திகள் | 12 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இரேமண்டு வூ மற்றும் இணை கட்டிடக் கலைஞர்கள் |
மேற்கோள்கள் | |
[1][2] |
லிப்போ மையத்தின் 28 வது தளத்தில் அமைந்துள்ள ரிசோர்சு பசிபிக் ஓல்டிங்சு என்ற நிறுவனம் தற்போது ஜமைக்காவின் துணை தூதரகத்தைக் கொண்டுள்ளது.