சிங்கப்பூர் காதுகேளாதவர்கள் பள்ளி

சிங்கப்பூரில் செயல்பட்ட காதுகேளாதோர் பள்ளி

சிங்கப்பூர் காதுகேளாதவர்கள் பள்ளி (Singapore School for the Deaf) சிங்கப்பூரில் காதுகேளாத குழந்தைகளுக்காக இயங்கிய ஒரு பள்ளியாகும். சிங்கப்பூர் காதுகேளாதவர்களுக்கான சங்கத்தால் இப்பள்ளி இயக்கப்பட்டது.

1963 ஆம் ஆண்டில் இப்பள்ளி திறக்கப்பட்டது. [1]

1977 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் செர்ரி கோ ஈவ் ஆங்கு பள்ளியில் மொத்த தொடர்பு தத்துவத்தை நிறுவினார். [2]

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, இப்பள்ளியின் பதிவு சுமார் 300 ஆக இருந்தது. 2010 ஆம் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20 எண்ணிக்கைக்கும் குறைவாக இருந்தது. மேலும் 2011 ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்க்கை நிறுத்தப்பட்டது, இதன் விளைவாக 2017 ஆம் ஆண்டில் 2 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர் [1] இந்த ஆண்டு, பள்ளி மூடப்பட்டு அதன் மாணவர்கள் லைட்டவுசு பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Amelia Teng (17 September 2017). "Singapore School for the Deaf to close due to dwindling enrolment". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  2. Lim, Chin Heng (May 1998). "An Overview of 20-year Development of Total Communication Approach with Signing Exact English in Singapore (1977-1997)" (PDF). Signal. Singapore Association for the Deaf. p. 217-219. - MITA (P) No. 250/10/97 - Document starts on p. 9/11.