சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள் (Sinhala Words of Tamil Origin) என்னும் இக்கட்டுரை இலங்கையில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் சிங்கள மொழியில் உள்வாங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுகிறது.
சொற்பட்டியல்
தொகுசிங்களம் | பலுக்கல் | பொருள் | தமிழ் | பொருள் | வகை |
---|---|---|---|---|---|
ආදායම් | ஆதாயம | வருமானம் | ஆதாயம் | நயம் | வணிகம் |
අක්කා | அக்கா | தமக்கை | அக்கா | தமக்கை | உறவுமுறை |
අම්බලම | அம்பலம | தெருவோரத் தங்குமிடம் | அம்பலம் | பொதுவிடம் | நாடோறும் |
ඇම්බැට්ටය | எம்பெட்டய | நாவிதன் | அம்பட்டன் | நாவிதன் | வணிகம் |
ආණ්ඩුව | ஆண்டுவ | அரசாங்கம் | ஆண்டான் | தலைவர் | நடப்பிக்கை |
ආප්ප | ஆப்ப | அப்பம் | அப்பம் | அப்பம் | உணவு |
අරලිය | அரலிய | அரளி | அரளி | அரளி | நிலைத்திணையியல் |
අවරිය | அவரிய | கருநீல நிலைத்திணை | அவுரி | கருநீல நிலைத்திணை | நிலைத்திணையியல் |
චීත්තය | (ச்)சீத்தய | சீத்தை | சீத்தை | சீத்தை | வணிகம் |
එදිරිය | எதிரிய | எதிர்ப்பு, பகைமை | எதிரி | போட்டியாளர், பகைவன் | படை |
ඉඩම | இடம | தளம், நிலம் | இடம் | இடம், தளம் | அமைப்பு |
ඊළ | ஈழ | ஈழை | ஈழை | ஈழை | நாடோறும் |
ඉලක්කය | இலக்கய | குறி | இலக்கு | குறி | படை |
ඉළන්දාරියා | இழன்தாரியா | இளைய மனிதன் | இளந்தாரி | இளைய மனிதன் | நாடோறும் |
ඉළවුව | இழவுவ | இறப்பு, இறுதிச் சடங்கு | இழவு | இறப்பு | நாடோறும் |
ඉරට්ට | இரட்ட | இரட்டை, இரட்டையெண் | இரட்டை | இரட்டை, இரட்டையெண் | வணிகம் |
කඩල | (க்)கடல | கடலை | கடலை | கடலை | உணவு |
කඩය | (க்)கடய | கடை | கடை | கடை | வணிகம் |
කඩියාලම | (க்)கடியாலம | கடிவாளம் | கடிவாளம் | கடிவாளம் | படை |
කංකාණියා | (க்)கங்(க்)காணியா | மேற்பார்வையாளர் | கங்காணி | கண்காணிப்பவர் | நடப்பிக்கை |
කලඳ | (க்)கல(ந்)த | எடைக்கான சிறு அலகு | கழஞ்சு | 1.77 கிராம் எடை | வணிகம் |
කලවම | (க்)கலவம | கலவை, கலப்பு | கலவை | கலவை | நாடோறும் |
කාල | (க்)கால | காற்பங்கு | கால் | காற்பங்கு | வணிகம் |
කළුදෑවා | (க்)கழுதேவா | கழுதை | கழுதை | கழுதை | நாடோறும் |
කම්බිය | (க்)கம்பிய | கம்பி | கம்பி | கம்பி | வணிகம் |
කාන්දම | (க்)கான்தம | காந்தம் | காந்தம் | காந்தம் | வணிகம் |
කණ්ණාඩිය | (க்)கண்ணாடிய | கண்ணாடி, மூக்குக் கண்ணாடி | கண்ணாடி | கண்ணாடி, மூக்குக் கண்ணாடி | நாடோறும் |
කප්පම | (க்)கப்பம | வரி | கப்பம் | வரி | படை |
කප්පර | (க்)கப்பர | சிறு கப்பல் | கப்பல் | கப்பல் | வணிகம் |
කැරපොත්තා | (க்)கெர(ப்)பொத்தா | கரப்பான் | கரப்பான் | கரப்பான் | நாடோறும் |
කරවල | (க்)கரவல | உலர்ந்த மீன் | கருவாடு | உலர்ந்த மீன் | உணவு |
කාසිය | (க்)காசிய | நாணயம் | காசு | சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் | வணிகம் |
කට්ටුමරම් | (க்)கட்டுமரம | கட்டுமரம் | கட்டுமரம் | கட்டுமரம் | வணிகம் |
කිට්ටු | (க்)கிட்டு | நெருக்கம், அருகே | கிட்டு | நெருக்கம், அருகே | நாடோறும் |
කොඩිය | (க்)கொடிய | கொடி | கொடி | கொடி | நடப்பிக்கை |
කොල්ලය | (க்)கொல்லய | கொள்ளை | கொள்ளை | கொள்ளை | படை |
කොම්බුව | (க்)கொம்புவ | ෙஇன் பெயர் | கொம்பு | ளகரத்தின் பெயர் | நாடோறும் |
කොණ්ඩය | (க்)கொண்டய | கொண்டை | கொண்டை | கொண்டை | நாடோறும் |
කොත්තමල්ලි | (க்)கொத்தமல்லி | கொத்தமல்லி | கொத்தமல்லி | கொத்தமல்லி | நிலைத்திணையியல் |
කෝවිල | (க்)கோவில | இந்துக் கோயில் | கோயில் | கோயில் | நாடோறும் |
කුඩය | (க்)குடய | குடை | குடை | குடை | நாடோறும் |
කූඩය | (க்)கூடய | கூடை | கூடை | கூடை | நாடோறும் |
කූඩුව | (க்)கூடுவ | கூடு, கூண்டு | கூடு | கூடு, சிறு பெட்டி | நாடோறும் |
කුරුම්බා | (க்)குரும்பா | இளந்தேங்காய் | குரும்பை | இளந்தேங்காய் | உணவு |
කුලිය | (க்)குலிய | வாடகை | கூலி | வாடகை | நடப்பிக்கை |
මලය | மலய | மலைநாடு | மலை | வரை | இடப்பெயர் |
මරක්කලය | மரக்கலய | படகு | மரக்கலம் | படகு | மீன்பிடி |
මස්සිනා | மஸ்சினா | மச்சான் | மச்சினன் | மச்சான் | உறவுமுறை |
මුදල | முதல | பணம் | முதல் | முதல் | வணிகம் |
මුදලාලි | முதலாலி | வணிகர், கடையொன்றின் உரிமையாளர் | முதலாளி | வணிகர் | வணிகம் |
මුදලි | முதலி | பெயரின் பகுதியொன்று | முதலியார் | குலப் பெயர் ஒன்று | பெயர் |
මුරුංගා | முருங்கா | முருங்கை | முருங்கை | முருங்கை | உணவு[1] |
නාඩගම | நாடகம | மேடை நாடகம் | நாடகம் | நாடகம், மேடை நாடகம் | பண்பாடு |
නංගී | நங்கீ | தங்கை | நங்கை | இளம்பெண் | உறவுமுறை |
ඕනෑ | ஓனே | வேண்டும் | வேண்டும் | வேண்டும் | நாடோறும் |
ඔත්තේ | ஒத்தே | ஒற்றை எண் | ஒற்றை | ஒற்றை எண் | வணிகம் |
පදක්කම | (ப்)பதக்கம | பதக்கம் | பதக்கம் | பதக்கம் | நடப்பிக்கை |
පළිය | (ப்)பழிய | பழி | பழி | குற்ற உணர்வு, பழி | படை |
පරිප්පු | (ப்)பரிப்பு | பருப்பு | பருப்பு | பருப்பு | உணவு |
පත්තු කරනවා | (ப்)பத்து (க்)கரனவா | ஒளியூட்டு, தீ வை | பற்று | தீப்பிடி | நாடோறும் |
පොරය | (ப்)பொரய | போர் | போர் | போர் | படை |
පොරොන්දුව | (ப்)பொரொன்துவ | உடன்படிக்கை, உறுதிமொழி | பொருந்து | பொருந்து, உடன்படு | நாடோறும் |
පොරොත්තුව | (ப்)பொரொத்துவ | தாழ்த்தல், காத்திருத்தல் | பொறுத்து | காத்திருத்தல் | நாடோறும் |
සල්ලි | சல்லி | பணம் | சல்லி | நாணயம் | வணிகம் |
සෙරෙප්පුව | செரெப்புவ | செருப்பு | செருப்பு | செருப்பு | நாடோறும் |
සුරුට්ටුව | சுருட்டுவ | சுருட்டு | சுருட்டு | சுருட்டு | நாடோறும் |
තක්කාලි | (த்)தக்காலி | தக்காளி | தக்காளி | தக்காளி | உணவு |
තල්ලු කරනවා | (த்)தல்லு (க்)கரனவா | தள்ளு | தள்ளு | தள்ளு | நாடோறும் |
තනි | (த்)தனி | தனி | தனி | தனி | நாடோறும் |
තරම | (த்)தரம | அளவு, நிலை, எண்ணிக்கை | தரம் | தரம் | வணிகம் |
තාත්තා | (த்)தாத்தா | தந்தை | தாத்தா | தாத்தா | உறவுமுறை |
තට්ටු කරනවා | (த்)தட்டு (க்)கரனவா | தட்டு | தட்டு | தட்டு | நாடோறும் |
උඩැක්කිය | உடெக்கிய | குறுகிய மேளமொன்று | உடுக்கை | குறுகிய மேளமொன்று | நாடோறும் |
උදව්ව | உதவ்வ | உதவி | உதவி | உதவி | நாடோறும் |
උලුක්කුව | உலுக்குவ | சுளுக்கு | சுளுக்கு | சுளுக்கு | நாடோறும் |
උරුමය | உருமய | வழிவழி உரிமை, உரித்துடைமை | உரிமை | உரித்துடைமை, உரிமை | நடப்பிக்கை |
වෙඩි තියනවා | வெடி (த்)தியனவா | சுடு | வெடி | சூடு, வெடி | படை |
වෙරි | வெரி | குடித்த நிலை | வெறி | பித்து | நாடோறும் |