சிங்களாந்தகபுரம்
சிங்களாந்தகபுரம் திருச்சி-துறையூர் நெடுஞ்சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள ஊராகும்.
சோழர்கள் பெருமை
தொகுராஜராஜசோழனுக்கு இருந்த பல சிறப்புப் பெயர்களில் 'சிங்களாந்தகன்' என்ற பெயரும் ஒன்று. கேரளத்தை வென்று கேரளாந்தகன் என்ற பெயரில், தஞ்சைப் பெரிய கோயிலின் நுழைவு வாயில் பெயரிடப்பட்டது. ஈழ நாட்டை வென்று, சிங்களர்களுக்கு எமன் போல விளங்கியவதால் சிங்களாந்தகன் என்ற பெயரைப் பெற்றான். முதலாம் ராசேந்திர சோழனும் ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றியடைந்தான். தனது தந்தையின் வெற்றி அடையாளமாக சிங்களாந்தகபுரம் என்னும் பெயரில் ஊரை நிறுவி, அமரசுந்தரேசுவரர் என்னும் சிவன் கோயிலை அமைத்துச் சிறப்பு செய்தான் என்பதை கோயிலில் காணும் ஒன்பது கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம்.[1]
ஊரமைப்பு
தொகுஇந்த கிராமத்தின் அமைவிடம் குறிப்பிடத்தக்கதாகும். தெருக்கள் நேராக கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி பசுமையான நெல் வயல்கள் உள்ளன. நான்கு மூலைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. ஊரின் வடமேற்கில் சிவன் கோயில் அமைந்துள்ளது.[1]
கோயில்
தொகுகிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்ற அமைப்புகளுடன் காணப்படுகிறது. இறைவன் அமரசுந்தரேசுவரர், இறைவி அகிலாண்டேசுவரி.[1]
வணிகக்குழு
தொகுநத்தம், திண்டுக்கல், சிங்களாந்தகபுரம், கோவில்பட்டி ஆகிய ஊர்களிலும், இலங்கையின் சில பகுதிகளிலும், வீரத்தளம், வீரத்தாவளம் தொடர்பான வணிகக்குழுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்
தொகு<references>
- ↑ 1.0 1.1 1.2 ஆர்.துரைராஜ், மாமன்னன் பெயரில் ஓர் ஊர், தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2011
- ↑ திருச்சி அருகே 11-ம் நூற்றாண்டு வணிகக் குழுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு, தினமணி, 27.5.2009