சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம்
சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம் என்பது சிலின்கான் வாலியில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனம் ஆகும். சிங்கியுலாரிட்டி என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் நுட்பியல் ஒற்றைப்புள்ளி என்பர். ஆகையால் இதை ஒற்றைப்புள்ளி பல்கலைக்கழகம் என்றும் கூறலாம். இது பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் இல்லை. இது கூகிள், நாசா நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
மடக்கை வேகத்தில் வளர்ச்சி பெறும் நுட்பங்களை புரிந்து, விரித்தி செய்து, பயன்படுத்துவதற்கு தகுந்த பணியாளர்களையும் தலைவர்களையும் உருவாக்கும் நோக்குடன் இக் கல்வி நிலையம் 2009 இல் தொடங்கப்பட்டது.
துறைகள்
தொகு- எதிர்காலவியல்
- வலைப்பின்னலும், கணினி ஒருங்கியங்களும்
- உயிரித் தொழில்நுட்பம், Bioinformatics
- நனோ தொழில்நுட்பம்
- மருத்துவம், நரம்பணுவியல், Human enhancement
- செயற்கை அறிவாண்மை, தானியங்கியல், Cognitive Computing
- ஆற்றல், சூழ்நிலைமண்டலம்
- விண்வெளி, physical sciences
- கொள்கை, சட்டம், அறம்
- நிதி, தொழில் முனைவு