சிங்கோகுரோமைட்டு

துத்தநாக குரோமியம் ஆக்சைடு கனிமம்

சிங்கோகுரோமைட்டு (Zincochromite) என்பது ZnCr2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாக குரோமியம் ஆக்சைடு கனிமமாக இது கருதப்படுகிறது. துத்தநாகத்தை ஒத்த குரோமைட்டு கனிமம் என்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக உருசியாவின் ஒனேகா ஏரிக்கு அருகில் அமைந்திருந்த யுரேனியப் படிவுகளில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது [3]. ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்திலுள்ள தோலோ மலையிலும், கானா நாட்டின் அசான்டி தங்கப் பட்டைப் பிரதேசத்திலுள்ள டார்க்வா சுரங்கத்திலும் சிங்கோகுரோமைட்டு காணப்படுகிறது [1]

சிங்கோகுரோமைட்டு
Zincochromite
உருசியாவில் கிடைத்த சிங்கோகுரோமைட்டு
பொதுவானாவை
வகைசிபைனல் குழு
வேதி வாய்பாடுZnCr2O4
இனங்காணல்
நிறம்பழுப்பு கலந்த கருப்பு
படிக இயல்புஅறுகோணத்துடன் வடிவுள்ள படிகங்கள்
படிக அமைப்புகனசதுரப் படிகம்
மோவின் அளவுகோல் வலிமை5.8
மிளிர்வுஅரை உலோகம்
கீற்றுவண்ணம்பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய வெள்லியில் ஒளிகசியும்
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
பிற சிறப்பியல்புகள்பலவீனமான இணைகாந்தம்
மேற்கோள்கள்[1][2][3][4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிங்கோகுரோமைட்டு கனிமத்தை Zchr[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat.org
  2. Webmineral data
  3. 3.0 3.1 Handbook of Mineralogy
  4. Mineralienatlas
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கோகுரோமைட்டு&oldid=4142873" இலிருந்து மீள்விக்கப்பட்டது