சிசு-2,3-பியூட்டைலின் கார்பனேட்டு

சிசு-2,3-பியூட்டைலின் கார்பனேட்டு (cis-2,3-Butylene carbonate) C5H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (H3C)2(C2H2)(CO3) என்ற கட்டமைப்பு வாய்ப்பாடாகவும் இதை எழுதுகிறார்கள். கார்பனேட்டு என்ற வேதி வினைக்குழு சிசு-2,3-பியூட்டைலின் குழுவின் இரு முனைகளிலும் பெற்றுள்ள ஓர் எசுத்தர் என்று சிசு-2,3-பியூட்டைலின் கார்பனேட்டு வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இதை ஆக்சிசனைக் கொண்டுள்ள ஐந்து உறுப்பினர் பல்லின வளையம் என்றும் வகைப்படுத்துகின்றனர். சிசு-4,5-டைமெத்தில்-1,3-டையாக்சோலான்-2-ஒன் என்ற டையாக்சோலான் வழிப்பொருள் என்ற கோணத்திலும் இதைப் பார்க்கமுடியும்.

சிசு-2,3-பியூட்டைலின் கார்பனேட்டு ஒரு புரோட்டான் வழங்கா கரைப்பானாகும். சூடோமோனாசு டைமினுட்டா பாக்டீரியம் சிசு-2,3-பியூட்டைலின் கார்பனேட்டை நிராற்பகுப்பு செய்கிறது. ஆனால் இதனுடைய முப்பரிமாண மாற்றியம் டிரான்சு- 2,3-பியூட்டைலின் கார்பனேட்டை நீராற்பகுப்பதில்லை. 2,3-பியூட்டிலின் கார்பனேட்டுகளின் சுழிமாய்க் கலவையிலிருந்து டிரான்சு- 2,3-பியூட்டைலின் கார்பனேட்டை தயாரிக்க இதுவொரு திறமையான வழி என முன்மொழியப்பட்டது [1].

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kazutsugu Matsumoto, Youichi Sato, Megumi Shimojo and Minoru Hatanaka (2000), Highly enantioselective preparation of C2-symmetrical diols: microbial hydrolysis of cyclic carbonates. Tetrahedron: Asymmetry, volume 11, issue 9, pages 1965-1973. எஆசு:10.1016/S0957-4166(00)00144-0