தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, அந்தந்த வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டப் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி அமைக்கப்பட்ட வருவாய் கிராம நிர்வாக நில உடைமையை குறிக்கும் முக்கிய ஆவணமாக இருப்பது, "சிட்டா" ஆகும்.

முதன்மை ஆவணம்

தொகு

வருவாய்க் கிராமங்களில் உள்ள நிலங்களின் நில உடைமையாளர்களின் மொத்தத் தொகுப்பான, கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும். சிட்டாவில் அந்த வருவாய் கிராமத்தின் நில உடைமையாளர்களின் பெயர்கள் அகர வரிசைக்கிரமமாகவும், ஏறுமுறையில் பட்டா எண் வழங்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு நில உடைமையாளருக்கும் அந்த வருவாய் கிராமத்தில் நன்செய் (நஞ்சை) நிலங்கள், புன்செய் (புஞ்சை) நிலங்கள், என ஒவ்வொரு நிலத் துண்டின் பரப்பு, பரப்புக்குரிய நில வரி முதலியன குறிக்கப்பட்டிருக்கும்.

பராமரிப்பு

தொகு

"சிட்டா" கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும். நில உடைமை மாறும்போது, மாற்றம் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற நில உரிமை மாற்ற உத்திரவின்படி தக்க மாறுதல் செய்து, உத்திரவு எண், உத்திரவு நாள் முதலியனவற்றைப் பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரின் சுருக்கொப்பம் மற்றும் நாள் இடப்பட்டிருக்கும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரிசைக்கிரமமாக புதிதாக உரிய மாற்றங்களுடன் எழுதி வட்டாட்சியரின் ஒப்புதலுக்குப் பின் கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கபறுதல்

தமிழ்நாட்டில் வருவாய்த்துறையின் நில உடைமை ஆவணங்கள் அனைத்தும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளது. நில உடைமையாளர்கள் தங்களது நிலத்தின் விபரங்களின் பதிவுகள் வேண்டினால், முன்பு போல் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படாமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தகவல் அலுவலகத்தில் உரிய கட்டணங்கள் செலுத்துவதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் பார்க்க

தொகு

வருவாய்த்துறை இணையதளம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டா&oldid=4128581" இலிருந்து மீள்விக்கப்பட்டது