சிட்ரஸ் கேன்கர் (நோய்)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சிட்ரஸ் கேன்கர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சிட்ரஸ் கேன்கர் (CITRUS CANKER) என்பது எலுமிச்சை தாவரங்களில் ஏற்படக்கூடிய நோயாகும். கான்கர் நோயை உண்டாக்கக் கூடிய சாந்தோமோனாஸ்.சிட்ரி குட்டையான பேசிலஸ் வகையைச் சாா்ந்தது. இதற்கு முனையில் அமைந்த ஒரு கசையிழை உள்ளது. இது 1.5 முதல் 3மியு நீளமும் 0.1 முதல் 1.5 மியு அகலமும் உடையது. இது கிராம் நெகட்டிவ் தன்மையுடைய காற்று சுவாசியாகும்
Xanthomonas axonopodis | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | X. axonopodis
|
இருசொற் பெயரீடு | |
Xanthomonas axonopodis (Hasse, 1915) | |
வேறு பெயர்கள் | |
Pseudomonas citrii |
நோயின் அறிகுறிகள்
தொகுஇந்நோய் எலுமிச்சை தாவரத்தின் இலைகள், கிளைகள், முட்கள் மற்றும் பழங்களை பாதிக்கிறது. தாவரத்தின் பசுமையான பாகங்கள் மற்றும் முதிா்ந்த பழங்களில் கொப்புளம் போன்ற பழுப்பு நிற புள்ளிகளைச் சுற்றி அடா் பழுப்பு நிற வழுவழுப்பும் பளபளப்பும் கொண்ட விளிம்புகளும் காணப்படுகின்றன. இந்தக் காயமானது முதலில் சிறிய மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தோன்றி பின்பு 3 முதல் 4 மிமீ விட்டமுள்ள மிகப்பொிய காயமாக கடினமான பழுப்பு நிற பகுதியாக மாறுகிறது.இந்தப் பழுப்பு நிற கொப்புளம் போன்ற தன்மையால் சந்தையில் பழங்களின் விற்பனை விலை குறைகிறது.
நோய் சுழற்சி
தொகுநோயினை உருவாக்கும் பாக்டீாியாக்கள் தாவரத்தில் உள்ள புறத் தோல் துளைகள் வழியாகவும், புண்கள் வழியாகவும் உட்புகுகின்றன. பாதிக்கப்பட்ட ஓம்புயிாியில் அவை நன்கு பெருகி நிலைத்திருக்கின்றன. இவை காற்றின் மூலமாகவோ மழை மற்றும் சில பூச்சிகளின் மூலமாகவோ புதிய தாவரங்களுக்குப் பரவுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட தாவர நாற்றுகளை பயிரிடுதலின் மூலமும் இந்நோய் சாதாரணமாகப் பரவுகிறது. மிதமான வெப்பநிலையும் ஈரப்பதமான சூழ்நிலையும் இந்நோய் பரவ ஏற்றச் சூழ்நிலையாகும். இந்நோய் பரவுவதற்கு சாதகமான வெப்பநிலை 20c டிகிாி முதல் 35c டிகிாி ஆகும்.