சிட்ரெங்கைட்டு

இரும்பு பாசுப்பேட்டு கனிமம்

சிட்ரெங்கைட்டு (Strengite) என்பது FePO4·2H2O.[4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒப்பீட்டளவில் மிகவும் அரிய பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. 1830 -1897 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த செருமனி நாட்டு கனிமவியலாளர் யோகான் ஆகத்து சிட்ரெங்கு கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு சிட்ரெங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது. இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில், வேரிசைட்டைப் போன்ற நிறம் கொண்டுள்ளது.[5] தண்ணீரில் ஓரளவு கரையும். குறிப்பாக குறைந்த காரகாடித்தன்மை மற்றும் குறைந்த ஆக்சிசனேற்றம் - ஒடுக்கம் திறன் உள்ள சூழ்நிலைகளில்[4] சிட்ரெங்கைட்டின் நிறம் நிறம் பெரிக் அயனியில் இருந்து வருகிறது (Fe3+).

சிட்ரெங்கைட்டுStrengite
சிட்ரெங்கைட்டு கனிமத்தின் சிறிய படிகம்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுFePO4·2H2O
இனங்காணல்
மோலார் நிறை186.85 கி/மோல்
நிறம்நிறமற்றது, வெளிர் ஊதா, ஆழ்ந்த ஊதா, சிவப்பு பச்சை கலந்த வெண்மை.
படிக இயல்புகோளம்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{010} சிற்ப்பு, {001} தெளிவற்றது
மோவின் அளவுகோல் வலிமை3.5–4
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் , கசியும்
ஒப்படர்த்தி2.84
அடர்த்தி2.87 g/cm3
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
2V கோணம்72° – 88°
நிறப்பிரிகைr < v, வலிமையானது
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிட்ரெங்கைட்டு கனிமத்தை Stg[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Strengite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
  2. "Strengite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
  3. "STRENGITE (Hydrated Iron Phosphate)". பார்க்கப்பட்ட நாள் 2011-10-25.
  4. 4.0 4.1 Patrick, W. H. Jr.; Gotoh, S.; Williams, B. G. (February 9, 1973), "Strengite Dissolution in Flooded Soils and Sediments", Science, 179 (4073): 564–565, Bibcode:1973Sci...179..564P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.179.4073.564, PMID 17820817, S2CID 29895850
  5. Pough, Frederick H.; Peterson, Roger Tory (1997), A Field Guide to Rocks and Minerals, Peterson Field Guide, vol. 7 (5th ed.), Houghton Mifflin Harcourt, p. 239, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-91096-X
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரெங்கைட்டு&oldid=4137590" இலிருந்து மீள்விக்கப்பட்டது