சித்தப்பா காம்ப்ளி

இந்திய அரசியல்வாதி

சித்தப்பா தொட்டப்பா காம்ப்ளி (Siddappa Totappa Kambli) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1882-1956 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். நவீன கர்நாடகாவின்ப்ளி நகரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாக அறியப்படுகிறார்.

ஊப்ளி-தார்வாடா நகராட்சி ஆணையத்திற்கு அருகில் சர் சித்தப்பா காம்பளி சிலை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பிரித்தானிய காலனித்துவ காலத்தில், காம்ப்ளி பம்பாய் சட்ட சபையின் உறுப்பினராக இருந்தார், அங்கு இவர் அதன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இரட்டை ஆட்சி முறையின் கீழ், இவர் 1930 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை விவசாய அமைச்சராகவும், 1932 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார் [2]

1937 மாகாணத் தேர்தலுக்குப் பிறகு, தொழிலதிபர் தஞ்சிசா கூப்பரின் கீழ் ஓர் அரசாங்கம் அமைக்கப்பட்டது, அங்கு காம்ப்ளி கல்வி, கலால் மற்றும் விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார். [3] கல்வி அமைச்சராக இருந்த காம்ப்ளி, தார்வாட்டில் கர்நாடக பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு பொறுப்பேற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, காம்ப்ளி கிசான் மசுதூர் பிரச்சா கட்சியில் சேர்ந்தார். கர்நாடகாவை ஒன்றிணைப்பதில் இவருக்கும் பங்கு உண்டு. [4] சித்தப்பா காம்ப்ளி 1956 ஆம் ஆண்டில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தப்பா_காம்ப்ளி&oldid=3823467" இலிருந்து மீள்விக்கப்பட்டது