சித்தரஞ்சன் தாசு தாக்கூர்

இந்திய அரசியல்வாதி

சித்தரஞ்சன் தாசு தாக்கூர் (Chittaranjan Das Thakur) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்காளத்தில் சசங்க தசுதாகூர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1976 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வியலில் இளநிலைப் பட்டன் பெற்ற இவர் 1981 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் இதே கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேற்கு வங்காள அரசியலில் இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பன்சுகுரா பாசுச்சிம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று பன்சுகுரா பாசுச்சிம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று சித்தரஞ்சன் தாசு தாக்கூர் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Panskura Paschim Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
  2. Choudhury, Sanjukta. "প্রয়াত সিপিআই নেতা চিত্তরঞ্জন দাশঠাকুরকে শেষ শ্রদ্ধা* | News 24 বাংলা Live" (in en-US). News 24 Bangla Live. https://livenews24bangla.com/last-tribute-to-late-cpi-leader-chittaranjan-dasthakur/.