சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம்

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் (Chittaranjan National Cancer Institute) இந்தியாவின் 25 பிராந்திய புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். ஒரு புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனையமாகவும் ஆராய்ச்சி நிறுவனமாகவும் இது செயல்படுகிறது. [1][2][3] கொல்கத்தா நகரத்தின் அசரா மோர் பகுதியில் இயாடின் தாசு பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாள் பேராசிரியர் மேடம் யே.கியூரியால் முறையாக சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை என்று தொடங்கப்பட்டு பின் சித்தரஞ்சன் தாசின் பெயர் சூட்டப்பட்டது, ஏனெனில் சித்தரஞ்சன் தாசு இந்நிறுவனத்திற்கான நிலம் மற்றும் சொத்துக்களை நன்கொடையாக வழங்கினார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Chittaranjan National Cancer Institute Official Website". Archived from the original on 29 September 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
  2. WHO India. பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. Government of India. 'National Cancer Control Programme'. பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்