சித்தரன்னா
சித்தரன்னா ( கருநாடகத்தில்) அல்லது புளிஹோரா / சித்ரன்னம் ( ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும்) அல்லது தாளித்த சாதம் ( தமிழகத்தில்) என்றழைக்கப்படும், இந்த உணவு தென்னிந்தியாவின் மாநிலங்களில் பரவலாக சமைக்கப்படும் உணவு வகையாகும். இது புளியோதரை போன்று தயாரிக்கப்படும் ஒரு உணவாகும், ஆனால் இது வேறு சுவை தரக்கூடியதாகும்.[1]. வடக்குக் கடலோர ஆந்திராவில் இதனை சட்டி எனவும் அழைக்கின்றனர்.
மாற்றுப் பெயர்கள் | சித்தரன்னா, புளிஹோரா, சித்ரன்னம், தாளித்த சாதம் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, புளி, எலுமிச்சை, நிலக்கடலை |
சாதம் (வேகவைத்த அரிசி), நிலக்கடலை, எலுமிச்சை, புளி கொண்டு தயாரிக்கப்படும் இவ்வகையான உணவு சிலசமயங்களில் மீதமான பழைய சாதத்தைக் கொண்டு செய்யப்படும். இரவு மீதமான சாதத்தை, காலையில் இவ்வாறு சமைப்பதால் இதனை சித்தரன்னா என்று அழைக்கின்றனர்.