சித்தாடெக்கு
சித்தாடெக்கு (Siddhatek) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[1] கர்ச்சத்து தாலுகாவில் இடம்பெற்றுள்ள இந்த நகரம் சிறீ சித்தி விநாயகர் கோயிலுக்கு பெயர் பெற்றறதாகும். இந்த விநாயகர் வலது-தந்தம் கொண்ட அவதாரம் ஆகும். மக்களால் சக்திவாய்ந்த துன்பம் நீக்குபவர் என்று நம்பப்படுகிறது.[2] வடக்கு நோக்கிய கோயிலைச் சுற்றியுள்ள புராணங்கள், விஷ்ணு சித்தி விநாயகரின் ஆசீர்வாதத்துடன் அசுரர்கள் மது-கைதாப் தோற்கடித்த இடத்தின் நினைவாக இது கட்டப்பட்டதாகக் கூறுகின்றன.[3] விநாயகர் ஜெயந்தி, விஜயதசமி மற்றும் சோம்வதி அமாவாசை பண்டிகைகளின் போது இந்த ஆலயம் குறிப்பாக பிரபலமாக உள்ளது.[4]
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சித்தாடெக்கு கிராமத்தில் வாழ்ந்த 315 குடும்பங்களில் 1463 பேர் இருந்தனர். இதில் 771 பேர் ஆண்கள் மற்றும் 692 பேர் பெண்கள் ஆவர்.[5] மொத்த மக்கள் தொகையில் 11.07 சதவீதம் பேர் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Transport to Siddhatek".
- ↑ Subramuniya, Satguru Sivaya Subramuniyaswami (2000). Loving Ganesa: Hinduism's Endearing Elephant-faced God (2 ed.). Himalayan Academy Publications. p. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-945497-77-6.
- ↑ Gunaji, 104.
- ↑ Gunaji, 105.
- ↑ "Siddhatek Village Population - Karjat, Ahmadnagar, Maharashtra". Censusindia2011.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
உசாத்துணை
தொகு- Gunaji, Milind (2005). Offbeat Tracks in Maharashtra: A Travel Guide. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7154-669-2.