சித்திரமேழி பெரியநாட்டார்
சித்திரமேழி பெரியநாட்டார் (Chitrameli periyanattar) சபை என்பது தென்னிந்தியாவில் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் வணிகக்குழுவாகும். [1][2] சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள வேளாண்குடிகளின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள். சித்திரமேழி பெரியநாட்டார் சபை பல்வேறு நிலையில் இருந்த வேளாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் செயல்பட்டது. [3]
மேழி என்பது உழவுக் கலப்பையாகும். சித்திரமாகப் பெரிக்கப்பட்டிருக்கும் உழவுக்கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. சித்திரமேழி சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாகக் கருதப்பட்டது.
சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்ற குழுவினர் அரியலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேளாண்மை பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் வணிகம் செய்துள்ளனர்.[4]
கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சித்திரமேழி பெரியநாட்டார் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. கோவை மாவட்டத்தில் அன்னூர், இடிகரை, திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி, கடத்தூர், ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் சித்திரமேழி பெரியநாட்டார் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. அன்னூர், இடிகரை ஆகிய ஊர்களில் சித்திரமேழி பட்டன் பற்றிய செய்திகள் உள்ளது. கடத்தூரில், சித்திரமேழி ஈஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் சுட்டப்பெறுகிறது. சித்திரமேழி விண்ணகரம் என்னும் பெருமாள் கோயில் விஜயமங்கலத்தில் சித்திரமேழி பெரியநாட்டார் கட்டிய கோயில் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சர்வதேச சட்டம்: தோற்றமும் - வளர்ச்சியும்!". தினமணி. https://www.dinamani.com/arasiyal-payilvom/2017/Nov/23/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2813511.html. பார்த்த நாள்: 20 July 2024.
- ↑ "கி.பி.13–ம் நூற்றாண்டை சேர்ந்த 'சித்திரமேழி' கல்வெட்டு கண்டுபிடிப்பு". dailythanthi.com. 2020-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-08-24.
- ↑ முனைவர்.ரா.பூங்குன்றன் (2005). கோயம்புத்தூர் மாவட்டத்தொல்லியல் கையேடு. சென்னை.: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.சென்னை. p. 56.
- ↑ "நாட்றாம்பள்ளி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/811745-tirupattur-inscriptions-dating-back-to-the-12th-century-ad-have-been-found-near-natrampalli.html. பார்த்த நாள்: 20 July 2024.