சித்திரை கார் (நெல்)

சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளதிருப்புல்லாணி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்த நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது. மேலும் பொதுவாக இவ்வகை நெற்பயிர்களை விவசாயிகள், “மட்டை” மற்றும் “நொருங்கன்” எனவும் அழைக்கபடுகின்றனர்.[1]

சித்திரை கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம் தொகு

110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]

வளருகை தொகு

நீர்நிலைகளின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் மணற்பாங்கான நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய சித்திரை கார், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.[1]

  • பொதுவாக சன்ன இரகங்களை விட இதன் சிவப்பு அரிசி அதிகம் விரும்புவதால் அதிக விலை மதிப்பை ஈட்டுவதாக கூறப்படுகிறது.[1]
  • சித்திரை கார் நெல்லின் அரிசியில் இட்லி, தோசைப் போன்ற சிற்றுண்டிகள் செய்ய சிறந்தது.[3]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Chitrakar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-03.
  2. பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "11. Chithiraikkar". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரை_கார்_(நெல்)&oldid=3722449" இலிருந்து மீள்விக்கப்பட்டது