சித்ரகுப்த் (இசையமைப்பாளர்)
சித்ரகுப்த் ஸ்ரீவஸ்தவா (Chitragupt Shrivastava) (16 நவம்பர் 1917 - 14 ஜனவரி 1991), சித்ரகுப்த் என்றும் அழைக்கப்படும் இவர், பாலிவுட் மற்றும் போச்புரித் திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.[1] [2]
சித்ரகுப்த் | |
---|---|
பிறப்பு | சித்ரகுப்த் ஸ்ரீவஸ்தவா 16 நவம்பர் 1917 |
இறப்பு | 14 சனவரி 1991 | (அகவை 73)
பணி | இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1946 – 1991 |
பிள்ளைகள் | ஆனந்த்- மிலிந்த் (ஆனந்த் ஸ்ரீவஸ்தவா-மிலிந்த் ஸ்ரீவஸ்தவா) இரட்டையர்கள் |
சொந்த வாழ்க்கை
தொகுசித்ரகுப்த் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள]] சாவ்ரேஜி என்ற கிராமத்தில் காயஸ்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது மகன்களான ஆனந்த் ஸ்ரீவஸ்தவா மற்றும் மிலிந்த் ஸ்ரீவஸ்தவா ஆகிய பாலிவுட் இசை இயக்குனர்களாக உள்ளனர்.[3]
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் பெரும்பாலும் பாடலாசிரியர் மஜ்ரூ சுல்தான்புரியுடன் பணியாற்றினார்.[4]
இவரது இசையில் கங்கா கி லஹ்ரேன் படத்தில் கிஷோர் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய மச்சல்டி ஹுய் ஹவா மே சாம் சாம் என்ற பாடல் வெற்றி பெற்றது. இவர் கிஷோர் குமாரை பாயல்வாலி தேக் நா என்ற அரை பாரம்பரிய பாடலையும், அகர் சன் லே கோய் நக்மா என்ற பிரபலமான பாடலையும் பாட வைத்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ranade, Ashok Damodar (2006). Hindi Film Song: Music Beyond Boundaries. Promilla & Company Publishers. p. 250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85002-69-9.
- ↑ Gulzar (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5.
- ↑ Morcom, Anna (1 January 2007). Hindi Film Songs and the Cinema. Ashgate Publishing, Ltd. pp. 28–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-5198-7.
- ↑ "Chitragupt - Singer, Music Director | MySwar". myswar.in. Archived from the original on 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
- ↑ Bhattacharjee, Rudradeep (2017-11-16). "'Who's Chitragupta?' Only the Hindi film music composer of numerous forgotten gems". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.