சித்திராங்கதன்

(சித்ராங்கதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சித்திராங்கதன் சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் பிறந்த முதல் மகன் ஆவார். இவருடைய அண்ணன் (சந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர்) வீடுமர் (பீஷ்மர்) அரசாள மாட்டேன் என்று சபதம் செய்திருந்ததால் இவர் அத்தினாபுரத்தின் அரியணை ஏறினார். இவர் தனது ஆட்சிக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். இது அதே பெயரைக் கொண்ட காந்தர்வ மன்னனின் கோபத்தைத் தூண்டியது. அவர்கள் மூன்றாண்டுகள் போர் புரிந்தனர். சித்திராங்கதனுக்கு வாரிசு இல்லாததால் அவருடைய தம்பி விசித்திரவீரியன் இவருக்கு அடுத்து அரசன் ஆனார்.

தொகுப்பு சித்திராங்கதன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திராங்கதன்&oldid=3196178" இலிருந்து மீள்விக்கப்பட்டது