சிந்தடி என்பது மூன்று சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, அளவடியின் நான்கு சீரில் ஒன்று சிந்தி(குறைந்து), மூன்று சீரில் இயங்குவதால் இதன் பெயர் சிந்தடி எனப்பெற்றது. இதனை முச்சீர் அடி என்றும் கூறுவர்.

என்னும் இப்பாடல் வஞ்சிவிருத்தமாகும். இதன்கண் நான்கு அடிகள் உள்ளன. ஒவ்வொரு அடியும் மூன்று சீர்களைக் கொண்டுள்ளது. இப்பாடலில் நேரொன்று ஆசிரியத்தளை, இயற்சீர்வெண்தளை ஆகிய இரண்டு தளைகள் உள்ளன இவ்விரு தளைகளும் தோன்ற மூன்று சீர்கள் தேவைப்படுகின்றன. எனவே, சிந்தடி அமைய இருதளைகள் தேவை. இதையே இலக்கணம் ‘இருதளை சிந்தாம்’ என்கின்றது.[2]

மேற்கோள் தொகு

  1. யாப்பருங்கலக் காரிகை பா. 13 மேற்கோள் சூளாமணி சீயவதை,பா. 170
  2. இலக்கண விளக்கம், பொருளதிகாரம்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தடி&oldid=1467276" இலிருந்து மீள்விக்கப்பட்டது