சிந்தாமணி, கர்நாடகம்
சிந்தாமணி இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு தாலுகா தலைமையகம் ஆகும். இந்த நகரம் கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெக்கான் பீடபூமியில் அமைந்துள்ளது. சிந்தாமணி கோலார் மாவட்டத்திலும் (பிளவுபடுவதற்கு முன்பு) மற்றும் தற்போது சிக்கபல்லாபூர் மாவட்டத்திலும் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாகும்.[1] சிந்தாமணி பட்டு மற்றும் தக்காளி உற்பத்தியில் கர்நாடகாவின் மிகப்பெரிய சந்தைகளுக்கு பெயர் பெற்றது.
சொற்பிறப்பியல்
தொகுசிந்தாமணி என்ற சொல் இந்து வேதங்கள் மற்றும் இலக்கியங்களில் பல நூற்றாண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்ட இரத்தினத்தைக் குறிக்கிறது. இருப்பினும், நகரத்தை 'சிந்தாமணி' என்று பெயரிடுவதற்கும் இரத்தினத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மராட்டா தலைவரான சிந்தாமணி ராவின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புவியியல்
தொகுசிந்தமணி தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் மையத்தில் சராசரியாக 865 மீ (2,838 அடி) உயரத்தில் உள்ளது. சிந்தமணி நகரம் 13.40 ° வடக்கு 78.06 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.
1950 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் உருவானதிலிருந்து 2007 ஆகஸ்ட் 23 வரை சிந்தாமணி கோலார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கர்நாடக அரசு பழைய கோலார் மாவட்டத்திலிருந்து சிக்கபல்லாபூர் புதிய மாவட்டத்தை செதுக்கியது. சிந்தமணி பின்னர் சிக்கபல்லாபூர் புதிய மாவட்டத்தில் சேர்க்ப்பட்டது. சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் ஆறு தாலுகாக்களில் சிந்தமணி ஒன்றாகும். சிந்தாமணி நகரம் என்ற தாலுகா தலைமையகம் மாவட்ட தலைமையகமான சிக்கபல்லாபூரிலிருந்து 36 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் கர்நாடகாவிலிருந்து 74 கி.மீ தொலைவிலும் உள்ளது. தாலுகா மேற்கில் சிட்லகட்டா , வடமேற்கில் பாகேபள்ளி, தென்மேற்கில் கோலார், தென்கிழக்கில் சீனிவாஸ்பூர் மற்றும் கிழக்கில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது .
காலநிலை
தொகுசிந்தாமணி இந்தியாவின் வெப்பமண்டல அரை வறண்ட காலநிலையைக் கொண்டது. இங்குள்ள காலநிலை மிதமான வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும். கோடை காலத்தின் மார்ச் முதல் மே மாதங்கள் சுமார் 38 °C வெப்பநிலையுடன் மிகவும் சூடாக இருக்கும். இப்பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 40 முதல் 75 செ.மீ வரை மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பருவத்தில் இப்பகுதியில் மழை பொழியும்.[2]
வளங்கள்
தொகுமண்
தொகுதாலுகா பெரும்பாலும் களி மண்ணைக் கொண்டுள்ளது. இந்த மண் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. மேலும் தானியங்கள், காய்கறி மற்றும் பருப்பு வகைகளை பயிரிட ஏற்றது.
நதிகள்
தொகுதாலுகாவில் வற்றாத ஆறுகள் இல்லை. பாபக்னி நதியின் நீர்பிடிப்பு மடு அம்பாஜிதுர்கா மலைகளில் கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக இது தாவரங்கள் இல்லாமலும், மண் அரிப்புனாலும் அழிந்துவிட்டது. சமீபத்தில், NREGA வழிகாட்டுதலின் கீழ் 73,111 தாவரங்கள் போசணையூட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
நீர்
தொகுசிந்தாமணியில் ஒரு சில பெரிய ஏரிகள் உள்ளன. அவை நகரிற்கு குடிநீர் வழங்குகின்றன. கனம்பள்ளி ஏரி நகரின் முக்கிய நீர் தேக்கமாகும். மற்ற ஏரிகளைத் தவிர - அம்பாஜிதுர்கா ஏரி, கோபாசந்திரா ஏரி, மலபள்ளி ஏரி, நெக்குண்டிபேட்டை ஏரி அவற்றில் சிலவாகும். 100 கோடி மானிய திட்டத்தின் கீழ், இந்த ஏரிகள் புத்துயிர் பெறுகின்றன. மேலும் நவீன வசதிகளுடன் சேமிப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதாரம்
தொகுபொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. சிந்தாமணி அதன் சதைப்பற்றுள்ள தக்காளி, நிலக்கடலை, மாம்பழம், வாழைப்பழங்கள், நிலக்கடலை மற்றும் பட்டு உற்பத்திக்கு பிரபலமானது. சிந்தமணி தக்காளி சந்தை கர்நாடகாவில் மிகப்பெரிய ஒன்றாகும். நன்னாரி போன்ற சில பானங்களுக்கும் இந்த நகரம் புகழ் பெற்றது. அகர்பத்தியின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கூட சிந்தமணி தனது பங்கை வகிக்கிறது. இந்நகர் பட்டுத் தொழில் மற்றும் பால் பால் பண்ணைகள், வெங்காயம் என்பவற்றிற்கு பிரபலமானது.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Chintamani".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Ajit TyagiVijaya, S.D.Attri (2010). CLIMATE PROFILE OF INDIA. India Meteorological Department. p. 6.
- ↑ "Chintamani , chikballapur".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)