சிந்தாமோனி தோபா
மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆட்சியாளர்
சிந்தாமோனி தோபா (Chintamoni Dhoba) (இறப்பு: பொ.ச 1300), இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள தல்பூம் பிராந்தியத்தின் ஆட்சியாளராக இருந்தார். அம்பிகாநகரில் (தற்போது பாங்குரா) தலைநகரை நிறுவினார். சிந்தாமோனி தோபி இனத்தைச் சேர்ந்தவர். இந்த பர்கானாக்களில் பயன்படுத்தப்படும் 'பை' அல்லது தானிய அளவு 'சிந்தமோன் பை' என்று அழைக்கப்பட்டது.[1]
சிந்தாமோனி தோபா | |
---|---|
சிந்தாமோனி தோபா | |
முன்னையவர் | கீழை கங்க வம்சத்தின் அனந்தவர்மன் சோடகங்கன் |
பின்னையவர் | ராஜா ஜெகன்னாத் தேவ் |
இறப்பு | கி.பி. 1300 |
மதம் | சமணம் |
இவரது ஆட்சி குறுகிய காலத்திற்கே இருந்தது, பின்னர், இவரது இராச்சியம் இராசத்தானில் இருந்து தார் பர்மர் குலத்தின் ஜகன்னாத் தேவ் என்பவரால் இணைக்கப்பட்டது. இவரது குடும்பம் 700 ஆண்டுகள் இப்பகுதியை ஆட்சி செய்தது.
சான்றுகள்
தொகு- ↑ Office, West Bengal (India) Census; Mitra, Asok (1952). District Handbooks: Birbhum (in ஆங்கிலம்). s.n. Guha Ray.