சிந்தி பகத்

சிந்தி நாட்டுப்புற கலை

சிந்தி பகத் என்பது பாடல், நடனம், கதை, கவிதைகள் மற்றும் நாடகம் இலக்கிய வகைகளை முற்றிலும் உள்ளடக்கிய ஒரு சிந்தி நாட்டுப்புற கலையாகும் . இது மிகவும் பிரபலமான சிந்தி நாட்டுப்புற பொழுதுபோக்கு வகையாகும்.

வரலாறு தொகு

பகத் பல ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்து வருகிறது. பழைய காலத்தில் காதலர்கள் மற்றும் போர்வீரர்கள் போன்றோரின் புராண கதைகளை கிராமப்புறங்களில் அலைந்து திரிந்து,  சிறு சிறு கவிதைகளாகப் பாடியும், பழங்கால பட்டிமன்றங்களில் கூறியதே இதன் தோற்றம் என்பதைக் கண்டறியலாம். சிந்தி பகத் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அதன் தற்போதைய தனித்துவமான வடிவத்தைப் பெற்றது, படிப்படியாக கலாச்சார பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சியாக பிரபலமாக தொடங்கியது. அதனால் அதன் நிகழ்ச்சிகள் மிகவும் தொழில்முறையாகவும் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட  நாட்டுப்புற கலை வடிவமாகவும் மாறியது.

செயல்திறன் தொகு

அந்த நிகழ்ச்சிகளின் கலை வடிவத்தின் பெயராலேயே  முக்கிய கதாபாத்திரமும்  '"பகத்'" என்றே  அழைக்கப்படும்,  அவரே  முதன்மை நடனக் கலைஞர், கதைசொல்லி மற்றும் நடிப்பின் ஆன்மாவாக கருதப்படுவார். மற்றவர்கள் "போல்டியாஸ்" (துணை நடிகர்கள்) அல்லது ஹார்மோனியம், தபேலா, டோலக், கஞ்சரி போன்ற எளிய தாளக்கருவிகளை வாசிப்பவர்கள்.

பகத் பல்வேறு இலக்கிய கலைகளின் சிறந்த குணங்களை ஒருங்கிணைக்கிறது, பார்வையாளர்கள் பல மணிநேரம் அந்த கலையின் இன்பத்தினால் மயக்கமடைகிறார்கள், பொதுவாக பகத் நிகழ்ச்சிகள்  மாலை தாமதமாகத் தொடங்க வேண்டும், கிராமம் அல்லது நகர மக்கள் இரவு உணவை எடுத்துக் கொண்ட பிறகு ஆரம்பிக்கப்படும் பகத் நிகழ்ச்சிகள் மறுநாள் அதிகாலை வரை நடைபெறும்  அதுவரைக்கும் கூட அவர்கள் உட்கார தயாராக இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலும் இரவு முழுவதும் அமர்ந்து, நடிப்பின் மயக்கும் இன்பத்தில் பங்கு கொள்கிறார்கள்.

பகத் கலைஞர் தனது மெல்லிசைக் குரல், ஆட்ட அடிகளின் நுட்பமான தாளம், உடல் அசைவுகள் மற்றும் மிகவும் திறமையான நாடகத்தனமான கதைசொல்லல் ஆகியவற்றின் மூலமும், நிகழ்ச்சி முழுவதும் பார்வையாளர்களை கண் இமைக்காமல் தங்கள் இருக்கை நுனிகளில் உட்கார வைக்கிறார். அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ப  மாறுபட்ட குரலைக் கொண்டு, வெவ்வேறு மனநிலைகளை உருவாக்குகிறார் - அது பரிதாபம், வேதனை, நகைச்சுவை, மெல்லிசை, பெருமை அல்லது சோகம் என கதைக்குத் தேவைப்படும் உணர்ச்சியை உருவாக்கும். அதன் மூலம் தனது பார்வையாளர்களின் இதயங்களை நகர்த்துகிறார், சூழ்நிலையின் தேவைக்கேற்ப சிரிப்பு அல்லது கண்ணீரை வரவழைக்கிறார்.

தற்காலத்திய சிந்தி பகத் தொகு

பகத் கலையானது  சிந்தி நாட்டுப்புற கலையின் மிக முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது சிந்தி சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பரவலாக சொல்லிவருகிறது.  இந்த பல்துறை கலைஞர்கள் கிராமப்புறங்களிலும், சிந்துவின் நகர்ப்புறங்களிலும் ஒரு காலத்தில் பெருமளவில் இருந்தனர். இருப்பினும், நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, மின்னணுவெகுஜன ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக-பொருளாதார நிர்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நாட்டுப்புறக் கலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும், இன்னும் சில முக்கிய பகத் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியை அர்ப்பணிப்புடன் அதே பாரம்பரியதுடன் எப்போதாவது நிகழ்த்துகிறார்கள்.

செல்வாக்கு மிக்க சிந்தி மற்றும் பிற பகத்துகளின் பட்டியல் தொகு

செழுமையான சிந்தி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் கருதப்படும் சிந்தி பகத்துகளின் முழுமையற்ற பட்டியல் பின்வருமாறு:

  • அர்ஜன் பகத்
  • பகவான் சாவ்லா
  • கான்ஷோ பகத்
  • கோவிந்திரம் பகத்
  • ஹஸாரம் பகத்
  • கானுராம் பகத்[1]
  • பிரதாப் பகத்
  • ப்ரீதம் பகத்
  • அயாஸ் அலி பகத்
  • பேராசிரியர். ராஜ் குமார் பகத்
  • கமல் பகத் [2]

மேற்கோள்கள் தொகு

  1. https://sindhiwiki.org/index.php/Bhagat_Kanwarram. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. https://sindhwelfare.wordpress.com/tag/sindhi-bhagat/. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தி_பகத்&oldid=3661348" இலிருந்து மீள்விக்கப்பட்டது