சிந்துப் பிரபந்தம்

சிந்துப் பிரபந்தம், 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு [1] ஒன்று இந்த நூலைக் குறிப்பிடுகிறது. திருவாழி பரப்பினான் கூத்தன் [2] என்பவன் இந்த நூலைப் பாடி, அதற்குப் பரிசாகப் பொத்தம்பி நாட்டு அரசனிடமிருந்து வள்ளுவப் பாக்கம் என்ற ஊரை முற்றுட்டாகப் பெற்றான் என்று அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மதுராந்தகப் பொத்தம்பிச் சோழன் என்பவன் பவணந்தி முனிவரைப் பேணிய சீயகங்கன் என்பவனின் அம்மான். [3] இவன் ‘திருவாழி பரப்பினான் சந்தி’ என்னும் பெயரில் திருநீர்மலை கோயிலுக்கு நிலம் வழங்கித் திருப்பணிகள் செய்தவன் என வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே இந்தச் சோழன் இந்த நூலுக்கு ஊரைப் பரிசாக வழங்கியவன் எனக் கொள்ளப்படுகிறது.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. கி.பி. 1237 இது மூன்றாம் இராசராசனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.
  2. திருவாழி என்னும் சக்கரத்தைக் கையில் கொண்டுள்ள திருமாலின் புகழைப் பரப்பினான் என்பது இதன் பொருள்.
  3. தாய்வழி மாமன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துப்_பிரபந்தம்&oldid=1297655" இலிருந்து மீள்விக்கப்பட்டது