சைனத்தில், சினவாணி (Jinvani) என்பது, சினனின் (அருகன்) மொழிகள் அல்லது போதனைகளாகும்.[1][2][3] இது சின (அருகன்) மற்றும் வாணி (குரல்) எனும் இரு சொற்களாலானது. பெரும்பாலும் இச்சொற்கள் ஒன்றாக உச்சரிக்கப்படும் அல்லது "சினவாணி" என்று ஒன்றாக பதிப்பிடப்படுவதுண்டு.[4] மேலும், இது "சின்வாணி" எனப்படும் ஒரு பாடலாகவோ அல்லது சினவாணி மா (சினவாணித் தாய்) எனும் நபராகவோ உருவகிக்கப்படும். அனைத்துமறிந்த வடிவான சினவானி (கேவல ஞானத்துடன் தொடர்புடைய) அருகனிடமிருந்து வெளிப்படுகின்ற எழுத்தற்ற பேச்சு எனக் கூறப்படுகிறது. இது, எழுத்துடனான உரையாடலாக மாறி, எல்லா உயிர்களுக்கும் புரியும் வகையில் உருய மொழியில் சென்று சேரும்.[5] இலக்கியங்களில், தீர்த்தங்கரர்களின் (அல்லது சினேசுவரர்களின்) சொற்பொழிவுகள் பொதுவாக சின்வாணி அல்லது சுருதிஞானம் (அ சுருத் ஞான) என அழைக்கப்படுகிறது. சுருதிஞானம் என்பதன் பொருள் புனித நூலறிவு ஆகும்.[6]

சினவாணி
சினவாணியைக் காட்டும் பொறிப்பு
சினவாணியைக் காட்டும் பொறிப்பு
தகவல்கள்
சமயம்சைனம்

சித்தரிப்பு

தொகு

சாந்திநாத் செயின் தீர்த் கோவிலிலுள்ள அறிவின் கடவுளாகிய சரசுவதி தேவியின் சிலை மயிலைப் பின்புறமாகக் கொண்டு தாமரையில் அமர்ந்தவாறு சினவாணியைக் கையிலேந்தியவாறு காட்சி தருகிறது. மேலும், சமண நூல்களுக்குத் தலைமை வகிப்பதனால், இவர் சினவாணி எனக் குறிப்பிடப்படுகிறார்.[7]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Universal Message of Jainism, 1998, p. xi-xii, பார்க்கப்பட்ட நாள் 7 September 2015
  2. "Jaipur gets ready for Shrut Panchami Mahaparva - merinews Mobile". merinews.com. Archived from the original on 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  3. "on www.jainsamaj.org ( Jainism, Ahimsa News, Religion, Non-Violence, Culture, Vegetarianism, Meditation, India. )", jainsamaj.org, archived from the original on 2017-07-01, பார்க்கப்பட்ட நாள் 2021-06-06
  4. "Jinavani". Book Search. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  5. "Atmanushasana (Discourse to the Soul)". Jain Dharma. Archived from the original on 5 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Jin-Vaani". Jainism Simplified. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
  7. Vensus A. George (2008). Paths to the Divine: Ancient and Indian. CRVP. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56518-248-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினவாணி&oldid=3554698" இலிருந்து மீள்விக்கப்பட்டது