சினாக் (Zinag) என்பது துத்தநாகம், அலுமினியம், வெள்ளி ஆகிய மூன்று உலோகங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகமாகும். இக்கலப்புலோகத்தின் இயைபு மிகச்சிறந்த எந்திரவியல் மற்றும் அரிமான எதிர்ப்பு பண்புகளைக் கொடுக்கிறது. குறைந்த அடர்த்தி கலப்புலோகமான இச்சேர்மம் இயங்கூர்திப் பரப்புகளில், விண்வெளி மருத்துவம், கட்டுமானத் தொழிற்துறை போன்றை பல்வேறுபட்ட செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது[1]. வெள்ளி உலோகத்தை இதனுடன் சேர்த்து மீநெகிழ்வுப் பண்புகளை அடையலாம். அளிக்கிறது. இதனால் எந்திரவியல் பண்புகளை இழக்காமல் உருக்குலைகிறது.

இக்கலப்புலோகத்தின் மூலமாக சினாக்கிசதோ செயன்முறையில் உலோக நுரைகள் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Casolcoa, Said R.; Parraa, M. López; Villaseñor, G. Torres (25 May 2006), "High strain rate superplasticity of a Zn–22 wt.%Al–x wt.%Ag alloys", Journal of Materials Processing Technology, 174 (1–3): 389–393, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.jmatprotec.2005.02.271
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாக்&oldid=2975464" இலிருந்து மீள்விக்கப்பட்டது