சினேகங்கினி சுரியா
சினேகங்கினி சுரியா (Snehangini Chhuria) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3] இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் இந்தக் கட்சியின் சார்பில் ஒடிசா சட்டமன்றத்திற்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அத்தாபிரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினேகங்கினி சுரியா | |
---|---|
உறுப்பினர் ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | நிகார் இரஞ்சன் மகானந்தா |
தொகுதி | அத்தாபிரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
குடும்பம்
தொகுசினேகங்கினி சுரியா 9, திசம்பர், 1968-இல் பிறந்தார்.[4] இவரது தந்தை மார்சு பிரசாத் மொகாபத்ரா. கலைத்துறையில் பட்டம் பெற்ற பிறகு சட்டம் பயின்ற இவர், சமூக சேவகராகச் சேவையாற்றினார்.[4] இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[5]
அரசியல்
தொகுசினேகங்கினி சுரியா சமூக சேவகியாக பணிபுரிந்து, ஆரம்பத்தில் ஊராட்சி மன்ற அளவில் அரசியலில் தீவிரமாக இருந்தார்.[4] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த சுரியா,[6][6] 2014 ஒடிசா பொதுத் தேர்தலில், சினேகங்கினி மீண்டும் பிஜு ஜனதா கட்சியின் சார்பில் அத்தாபிரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 15வது ஒடிசா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9]
15வது ஒடிசா சட்டப் பேரவைக்கு சினேகங்கினி sஉரியா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நவீன் பட்நாயக்கின் 4வது அமைச்சரவையில் மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், 2கைவினை, ஜவுளி மற்றும் கைவினைத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[4][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Odisha's Attabira MLA Snehangini Chhuria Appointed As President Of BJD's Women Wing". Update Odisha. 31 December 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
- ↑ Subrat Mohanty (3 April 2019). "Repeat of triangular fight in Attabira assembly segment in Odisha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
- ↑ "From Teacher to Minister: Journey of Snehangini". The New Indian Express. 26 May 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Smt. Snehangini Chhuria". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 20 February 2019.
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2009/stat_OR_April2009.pdf
- ↑ 6.0 6.1 "List of Candidates in ATTABIRA:BARGARH". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
- ↑ "Constituency Wise odisha Assembly Election result 2014". Leadtech.in. Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.
- ↑ "Odisha - Attabira". Election Commission of India. Archived from the original on 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ "Orissa Assembly Election 2014 Constituency: Attabira (4)". EmpoweringIndia.org. Archived from the original on 12 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ Dharitri. "ଦେବଗଡରେ ମନ୍ତ୍ରୀ ସ୍ନେହାଙ୍ଗିନୀ ଛୁରିଆ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତେଳନ କଲେ". Dharitri.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.