சினைதா அக்சென்சியேவா

சினைதா மிகோலாயேவ்னா அக்சென்சியேவா (Zinaïda Mikolaïevna Aksentieva, சூன் 25, 1900 – ஏப்பிரல் 8, 1969) ஓர் உக்ரைனிய/சோவியத் வானியலாளர் ஆவார்.[1]

சினைதா அக்சென்சியேவா
Zinaïda Aksentieva
பிறப்புஅக்சென்சியேவா சினைதா மிகோலாயீவ்னா
Аксентьєва Зінаїда Миколаївна

ஜூன் 25, 1900
ஒதேசா, உருசியப் பேரரசு
இறப்புவார்ப்புரு:D-da
பொல்தாவா, உக்ரைன் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியப் பேரரசு
கல்விஒதேசா பல்கலைக்கழகம்
பணிவானியலாளர்

வாழ்க்கை தொகு

இவர் 1900 இல் ஒதேசாவில் பிறந்தார். இவர் 1924 இல் ஒதேசா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் ஈர்ப்பின் படவரைவில் ஈடுபட்டார். இவரது வான்காணகம் தான் முதலில் புவியின் மையத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த்து. இவர் பொல்தாவா வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1951 இல் அதன் இயக்குநர் ஆனார். இவர் புவி ஓதங்களால் குலைதலையும் புவி ஈர்ப்புப் புல அளக்கையிலும் ஈடுபட்டார்.

வெள்ளியின் பல குழிப்பள்ளங்கள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[2]

அக்சென்சியேவா 1969 இல் தன் வான்காணகம் இருந்த பொல்தாவாவில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Academy of Sciences of the Ukrainian SSR, 1919-1979:, 1980
  2. Gazetteer of Planetary Nomenclature 1994, Working Group for Planetary System Nomenclature, 1995, International Astronomical Union, United States Government Printing Office
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினைதா_அக்சென்சியேவா&oldid=2665586" இலிருந்து மீள்விக்கப்பட்டது