சின்னாறு - பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் ஓர் ஆறு

சின்னாறு பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு சிறு ஆறாகும். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உற்பத்தியாகி, அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே வெள்ளாற்றில் கலக்கிறது.[1]

வருடத்தில் சுமாராக ஆறுமாதங்கள் நீர் பாயும் இந்த சிறு நதியின் மூலம் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் 15-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.

சின்னாறு அணை

தொகு

இவ்வாற்றின் குறுக்கே எறையூர் (பெரம்பலூர்) அருகே சின்னாறு அணை - பெரம்பலூர் மாவட்டம் 1958 இல் கட்டப்பட்டுள்ளது.[2]<ref>

மேற்கோள்கள்

தொகு
  1. சின்னாறு நீர் பாசண பகுதி - நீர்வள நிலவள திட்டம்
  2. சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வலியுறுத்தல், தினமணி, நாள்: நவம்பர் 22, 2015.