சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் என்பது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். [1] இக்கோயிலில் மூலவர் 16 அடி உயரம் கொண்டவராக உள்ளார். இம்மூலவரைச் செய்ய நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட சாளக்கிராமம் எனப்படும் கல்லினை உபயோகித்துள்ளனர்.[2]

தல சிறப்பு தொகு

  • அனுமார் 16 அடி உயரம் கொண்டவர்.
  • கோயிலின் விமானத்தில் இராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரக் காண்டத்தில் கூறப்பட்டுள்ள 64 காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.
  • பக்தர்களால் எழுதப்பட்ட ஒரு கோடி ராமநாம ஜெபம் இங்குள்ளது.

சன்னதிகள் தொகு

மூலவர் அஞ்சலி வரத ஆஞ்சநேயர். நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜூவிதன் ஆகியோரின் உருவச்சிலைகள் மகாமண்டபத்தில் உள்ளன. இவர்கள் ஆஞ்சநேயரின் பரிவாரங்கள்.

தலவரலாறு தொகு

  • கனகராஜ் எனும் பக்தர் கனவில் அனுமார் இங்கு தவக்கோலத்தில் வீற்றிருப்பதாக செய்தி கிடைத்து இங்கு கோயில் அமைக்கப்பட்டது.
  • சஞ்சீவி மலையை அனுமார் எடுத்துச் செல்லும் போது இத்தலத்தில் சிறுபகுதி விழுந்தது. அது தறபோது சிறுமலை என்று உள்ளது.
  • இராமாயண காலத்தில் அனுமரின் பாதம் இத்தலத்தில் பதிந்தது.

ஆதாரங்கள் தொகு

  1. "Anjali Varatha Anjaneyar Temple : Anjali Varatha Anjaneyar Anjali Varatha Anjaneyar Temple Details - Anjali Varatha Anjaneyar- Chinnalapatti - Tamilnadu Temple - அஞ்சலி வரத ஆஞ்சநேயர்".
  2. "Dinakaran - ஆஞ்சநேயர் : ட்வென்ட்டி 20".[தொடர்பிழந்த இணைப்பு]