சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)

அருந்ததி ராயின் அறிமுக புதினம்

சின்ன விஷயங்களின் கடவுள் என்பது அருந்ததி ராய் எழுதிய "த காட் ஆஃப் சிமோல் திங்சு" (The god of small things) என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு ஆகும்.

சின்ன விஷயங்களின் கடவுள்
சின்ன விஷயங்களின் கடவுள் நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்அருந்ததி ராய்
மொழிபெயர்ப்பாளர்ஜி. குப்புசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைநூல்
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2012

இதன் ஆங்கில மூலப் படைப்பு ஆரம்பத்தில் வெளியிட பொருளாதார உதவியின்றி எளிமையாக வெளியிடப்பட்டது. பின்னர் படைப்பின் சிறப்பு பரவத்துவங்கியது, மேலும் 45 லட்சங்களுக்கு மேல் பொருளாதரம் ஈட்டியது. அதன்பின்னர் ஐரோப்பிய மொழிகள் உட்பட ஏராளமான மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாள மொழியில் இந்த நூல் பிரியா ஏ.எஸ் என்பவரால் குஞ்ஞு காரியங்களுடைய ஒடே தம்புரான் (കുഞ്ഞു കാര്യങ്ങളുടെ ഒടേതമ്പുരാന്‍) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கடைசியாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இந்நூல் வெளியிடப்பட்ட மொழிகளின் எண்ணி்க்கை 39 ஆகும்.

தமிழில் இந்நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில்[1] 2012 சூலை 28-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

2012, சூலை 28-ஆம் தேதி சென்னையில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில், சின்ன விஷயங்களின் கடவுள் நூல் வெளியீட்டு விழாவின்போது கவிஞர் சுகிர்தாரணி (இடது பக்கம் உள்ளவர்) எழுதிய காமத்திப்பூ கவிதை நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் (வலது பக்கம் உள்ளவர்) வெளியிட, பெறுகிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

கதை சுருக்கம்

தொகு

கதை கேரளா, இந்தியாவில் கோட்டயம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அய்மனம் சிற்றூரில் நடப்பதாக உள்ளது. கதையானது 1969 க்கு இடையில் முன்னும் பின்னுமாக நடக்கிறது. இரட்டையர்களான ராஹேல் (பெண்) மற்றும் எஸ்தப்பன் (சிறுவன்) ஆவர். குடும்பத்தில் நிகழ்ந்த துயர நிகழ்வுக்குப் பிறகு ஏழு வயதில் எஸ்தப்பன் கல்கத்தாவில் உள்ள அவனது தந்தையிடம் அனுப்பி வைக்கப்படுகிறான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 1993 இல் அய்மனத்துக்கே திரும்புகிறான். இரட்டையர்கள் மீண்டும் ஒன்றிணைகின்றனர் அப்போது எஸ்தப்பன் எல்லா வகையிலும் மாறியவனாக உள்ளதாக ராஹேல் உணர்கிறாள்.

அம்மு ஐப்பே பப்பாச்சி என்று அழைக்கப்படும் தனது மோசமான தந்தையிடமிருந்தும், மம்மாச்சி என்று அழைக்கப்படும் அவரது கசப்பான, நீண்டகால பொறுமையுள்ள தாயிடமிருந்தும் தப்பிக்க ஆசைப்படுகிறாள். கல்கத்தாவில் ஒரு தொலைதூர அத்தையுடன் ஒரு கோடைகாலத்தைக் கழிக்க செல்ல அனுமதிக்குமாறு அவள் பெற்றோரை வற்புறுத்துகிறாள். அய்மனத்துக்கு திரும்பாமல் இருப்பதற்காக, அவள் அங்கேயே ஒரு ஆடவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் பின்னர் அவன் ஒரு குடிகாரன் என்பது தெரிகிறது. அவன் அவளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்கிறான். அவள் ரஹேல் மற்றும் எஸ்தாவைப் பெற்றெடுக்கிறாள். கணவனை விட்டுவிட்டு, தன் பெற்றோர் மற்றும் சகோதரர் சாக்கோவுடன் வாழ அய்மனமுக்குத் திரும்புகிறாள்.

குறிப்புகள்

தொகு
  1. "தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் - 25". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.