பிரபஞ்சன்
பிரபஞ்சன் (Prapanchan, ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1]
பிரபஞ்சன் | |
---|---|
பிறப்பு | எஸ். வைத்திலிங்கம் 27 ஏப்ரல் 1945 பாண்டிச்சேரி, இந்தியா |
இறப்பு | 21 திசம்பர் 2018 புதுச்சேரி | (அகவை 73)
புனைபெயர் | பிரபஞ்சன் |
தொழில் | எழுத்தாளர், திறனாய்வாளர் |
மொழி | தமிழ் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வானம் வசப்படும் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
துணைவர் | பிரமிளா ராணி |
இணையதளம் | |
www |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார்.
புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார்.[2][3][4][5][6][7][8][9]
விருதுகள்
தொகு- சாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)
- பாரதிய பாஷா பரிஷத் விருது
- கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
- இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
- சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
- தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
- தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
எழுதிய நூல்கள்
தொகு(முழுமையான பட்டியல் அல்ல)
புதினங்கள்
தொகு- எனக்குள் இருப்பவள்
- கண்ணீரால் காப்போம்
- காகித மனிதர்கள்
- காதலெனும் ஏணியிலே
- சந்தியா
- சுகபோகத்தீவுகள்
- பதவி
- பூக்கள் நாளையும் மலரும்
- பெண்மை வெல்க
- மகாநதி (ரங்கங்மாள் நினைவுப்பரிசு பெற்றது)
- மானுடம் வெல்லும்
- வானம் வசப்படும்
- அகல்யா நாடகம்
வரலாறு
தொகு- ஈரோடு தமிழர் உயிரோடு
- முதல் மழை துளி
- மகாபாரத மாந்தர்கள்
குறு நாவல்கள்
தொகு- ஆண்களும் பெண்களும்
சிறுகதைத் தொகுப்புகள்
தொகு- இருட்டு வாசல்
- ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
- திரை; பூஞ்சோலை பதிப்பகம், சென்னை; (திரை, பிறை, குழந்தைகள், அமரத்துவம், ஒரு நெகடிவ் அப்ரோச், பாதுகை, சிக்கி, கரியமுகம், உறை, ஆகஸ்டு - 15, சிறுமை கண்டு..., பப்பா, காக்கைச்சிறகு, ஏழைநாடும் ஒரு பரம ஏழையும்)
- நேற்று மனிதர்கள்
- பிரபஞ்சன் கதைகள்
- யாசுவின் அக்கா
- விட்டு விடுதலையாகி
- குயிலம்மை
சிறுகதைகள்
தொகுநாடகங்கள்
தொகு- முட்டை
- அகல்யா
கட்டுரைகள்
தொகு- மயிலிறகு குட்டி போட்டது
- அப்பாவின் வேஷ்டி
- தாழப்பறக்காத பரத்தையர் கொடி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Noted Tamil writer and Sahitya Akademi awardee Prapanchan passes away at 73". The News Minute. 21 திசம்பர் 2018. https://www.thenewsminute.com/article/noted-tamil-writer-and-sahitya-akademi-awardee-prapanchan-passes-away-73-93743.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி Official website.
- ↑ "Tamil translation of Malayalam travelogue launched". தி இந்து. Archived from the original on 5 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prapanchan interview". Tamiloviam (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kumar, Neelam (2002). Our favourite Indian stories. Jaico Publishing House. pp. xxii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172249786.
- ↑ எஸ். ராமகிருஷ்ணன். "பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு". Uyirmmai (in Tamil). Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Prapanchan profile". Uyirmmai. Archived from the original on 8 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prapanchan Profile". Tamil Virtual University. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
- ↑ "Prapanchan interview". Nilacharal (in Tamil). Archived from the original on 12 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)