சிப்ரா மசும்தர்

இந்திய மலையேற்ற வீராங்கனை

சிப்ரா மசும்தர் (Shipra Mazumdar) இந்திய இராணுவத்தில் படைத்துறைத் தலைவராகவும் இந்திய இராணுவ பெண்கள் மலையேறும் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். வங்காளியான இவர் புனேவில் உள்ள இராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பயின்றார். உத்தரகாசியில் இருக்கும் நேரு மலையேற்ற நிறுவனத்தில் தனது அடிப்படை மற்றும் மேம்பட்ட மலையேறும் படிப்புகளை முடித்தார். .

சிப்ரா மசும்தர்
Shipra Mazumdar
தேசியம்இந்தியா இந்தியர்
பணிஇந்தியத் தரைப்படை படைத்துறைத் தலைவர்
அறியப்படுவதுஎவரெசுட்டு சிகரத்தை அடைந்தவர்

மலையேறும் பயணம்

தொகு

2005 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று 9:30 மணிக்கு [1] சிப்ரா தனது அணியின் மற்ற மூன்று உறுப்பினர்களுடன் எவரெசுட்டு சிகரத்தை அடைந்தார். அவர்கள் திபெத்தில் இருந்து வடக்கு கோல் வழியைப் பயன்படுத்தி மலை ஏறினர்.[2]

இந்திய விமானப்படையில் இருந்து மற்றொரு மலையேறும் குழு மே 30 அன்று உச்சத்தை அடைந்தது.[1] அந்த அணியின் ஓர் உறுப்பினர், படை அணிப்பிரிவு தலைவர் எசு.எசு. சைதன்யா, சிகரத்திலிருந்து இறங்கும் போது பனிப்புயலில் காணாமல் போனார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Army women create history atop Everest". The Tribune (Chandigarh). June 2, 2013. http://www.tribuneindia.com/2005/20050603/main5.htm. பார்த்த நாள்: January 26, 2013. "Army women create history atop Everest".
  2. "Indian Army women scale Mt Everest". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mumbai). June 3, 2005 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 16, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216063604/http://articles.timesofindia.indiatimes.com/2005-06-03/india/27863619_1_mt-everest-indian-army-tallest-peak. பார்த்த நாள்: January 26, 2013. 
  3. "Army women on top of the world". The Telegraph (Calcutta). June 3, 2005. http://www.telegraphindia.com/1050603/asp/nation/story_4821257.asp. பார்த்த நாள்: January 26, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்ரா_மசும்தர்&oldid=3947541" இலிருந்து மீள்விக்கப்பட்டது