சிப் குறியீடு

ஐக்கிய அமெரிக்காவின் அஞ்சல் குறியீடு

சிப் குறியீடு (ZIP codes) என்பது 1963 முதல் ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவையால் பயன்படுத்தப்படும் அஞ்சல் குறியீடுகள் ஆகும். இச்சொற் சுருக்கம் இசட்ஐபி, மண்டல மேம்பாட்டுத் திட்டம்,[1] என்பதன் ஆங்கில மூலத்தின் முதலெழுத்துக்களின் சுருக்கமாகும். ஆங்கிலத்தில் பெரிய எழுத்துருவில், (capital letters), எழுதப்படுகிறது. தவிரவும் ஆங்கிலத்தில் இதன் பொருள் (விரைவாகச் செல்) அஞ்சல் திறனுடன் விரைவாக எடுத்துச் செல்லப்படுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அனுப்புநர்கள் அஞ்சல் முகவரியில் இந்தக் குறியீட்டினை இடுவதன் மூலம் விரைவாகச் செல்லும் என அறிவுறுத்தப்படுகிறது.

சிப் குறியீட்டுப் பயன்பாட்டை பரவலாக்க 1963இல் வெளியிடப்பட்ட யு.எஸ். அஞ்சல் அலுவலகத்தின் அறிவிப்பு
ஐக்கிய அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளுக்கான சிப் குறியீடு

இதன் வடிவமைப்பு ஐந்து தசமத் தானங்களை உடையதாக உள்ளது. 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான ZIP+4 குறியீடு, இந்த ஐந்து தானங்களுக்கு அடுத்து இடைக்கோடிட்டு மேலும் குறிப்பிட்ட அமைவிடதைக் குறிக்குமாறு நான்கு தானங்களை உடையதாக இருந்தது. முன்னதாக சிப் குறியீடு தங்கள் சேவை சின்னமாக (ஒருவகை வணிகச் சின்னம்) ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறையால் பதியப்பட்டிருந்தது; இந்த பதிவு தற்போது காலாவதியாகி விட்டது.[2]

மேற்சான்றுகள்தொகு

  1. "Mr. Zip and the ZIP Code Promotional Campaign". Smithsonian National Postal Museum. 25 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Latest Status Info". United States Patent and Trademark Office. July 10, 2009 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்_குறியீடு&oldid=3554062" இருந்து மீள்விக்கப்பட்டது