சியாமலா பப்பு
சியாமலா பப்பு (21 மே 1933 - 7 செப்டம்பர் 2016) ஓர் இந்திய வழக்கறிஞர். இவர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற மூத்த ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார். [1] இவர் இந்திய சட்ட ஆணையத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அப்போது பல மாநாடுகளில் கலந்து கொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார்.[2] இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸின் முன்னாள் மாணவர். [3][4] இவர் இந்திய உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் உறுப்பினராகவும் [5]மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சுகாதாரத்திற்கான சுயாதீன ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.[6] இவர் 1973–74 காலப்பகுதியில் தனது மிராண்டா ஹவுஸின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [7]
சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீயினை இவருக்கு இந்திய அரசு 2009 இல் வழங்கியது. [8] இவர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Lady lawyer pierces glass ceiling". Times of India. 9 August 2007. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "All India Seminar on judicial reforms organized by Confederation of Indian Bar, July 31-August 1, 2010". DSK Legal. 2016. Archived from the original on 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Distinguished Alumnae". Miranda House Alumni Association. 2016. Archived from the original on 14 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Member's Details". Supreme Court Bar Association. 2016. Archived from the original on 5 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Centre clarifies stand on AIDS control programme". The Hindu. 10 February 2000. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Governing Body Members". Miranda House. 2016. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Governing Body Members". Miranda House. 2016. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)