சியாவுர் ரகுமான் அன்சாரி

இந்திய அரசியல்வாதி

சியாவுர் ரகுமான் அன்சாரி (Ziaur Rahman Ansari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1925 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரபிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] இராச்சீவ் காந்தியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த அன்சாரி, தன்னைச் சந்திக்கச் சென்ற முக்தி தத்தா என்ற ஆர்வலரை மானபங்கப்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். [5]

சியாவுர் ரகுமான் அன்சாரி
Ziaur Rahman Ansari
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971-1977
முன்னையவர்கிருசுணா தேவ் திரிபாதி
பின்னவர்இராகவேந்திர சிங்
பதவியில்
1980-1989
முன்னையவர்இராகவேந்திர சிங்
பின்னவர்அன்வர் அகமது
தொகுதிஉன்னாவ் மக்களவைத் தொகுதி]], உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-03-09)9 மார்ச்சு 1925
இறப்பு6 அக்டோபர் 1992(1992-10-06) (அகவை 67)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று தன்னுடைய 67 ஆவது வயதில் புதுதில்லியில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary References". Lok Sabha Debates 16 (1): 5. 24 November 1992. https://eparlib.nic.in/bitstream/123456789/478/1/lsd_10_5th_24-11-1992.pdf. 
  2. Ashwini Bhatnagar (20 December 2019). The Lotus Years: Political Life in India in the Time of Rajiv Gandhi. Hachette India. pp. 241–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88322-57-7. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  3. India. Parliament. Lok Sabha (1975). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. pp. 24–. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  4. India Today. Living Media India Pvt. Limited. 1986. p. 54. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  5. "#MeToo and M.J. Akbar: L'affaire Ziaur Rahman Ansari had a similar ring". The Hindu. 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2023.

புற இணைப்புகள்

தொகு