சியோ ஜியோம் ஜூ

கொரிய கவிஞர்

சியோ ஜியோங் ஜூ ( Seo Jeong-ju மே 18, 1915–24 திசம்பர் 2000) என்பவர் கொரிய மொழிக் கவிஞர் ஆவார். மிடங் என்ற புனை பெயரில் ஏராளமான கவிதைகளைப் படைத்துள்ளார்.[1] 15 தொகுப்புகளில் இவருடைய கவிதைகள் வெளி வந்துள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு, செருமனி, எசுப்பானியம் போன்ற பல மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிப் பெயர்க்கப்பட்டன.

சியோ ஜியோம் ஜூ

இவரின் பாட்டி இவருக்குச் சொன்ன கதைகளும் புத்த மத ஆர்வமும் இவருடைய கவிதை ஆக்கங்களுக்கு அடிப்படையாக இருந்தன. கோசுன் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரைக்கப் பட்டது.[2]

மேற்கோள்

தொகு
  1. "Seo Jeongju" LTI Korea Datasheet available at LTI Korea Library or online at: http://klti.or.kr/ke_04_03_011.do# பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்
  2. http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=106&oid=038&aid=0000042212 The most popular poet passed away 2000-12-25
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோ_ஜியோம்_ஜூ&oldid=4136911" இலிருந்து மீள்விக்கப்பட்டது