சியோ பகவான் திப்ரேவால்

இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற மருத்துவர்

சியோ பகவான் திப்ரேவால் (Sheo Bhagwan Tibrewal) இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சியாளராகவும், இலண்டன் கிங்சு கல்லூரியின் ஜிகேடி மருத்துவக் கல்விப் பள்ளியில் கௌரவ மூத்த விரிவுரையாளராகவும் உள்ளார்.[1] மோகன் திப்ரேவாலுக்கு மகனாகப் பிறந்த இவர், இராஞ்சி பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[2]

சியோ பகவான் திப்ரேவால்
Sheo Bhagwan Tibrewal
பிறப்புபீகார், இந்தியா
பணிஎலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்
பெற்றோர்மோகன் திப்ரேவால்
விருதுகள்பத்மசிறீ
இந்தியாவின் பெருமை தங்க விருது


1898 ஆம் ஆண்டு முதல், நம்பகமான மற்றும் விரிவான சுயசரிதை தரவுகளுக்கான தரநிலையாக இருந்து வரும் மார்க்விசு யார் எவர் பட்டியலில் சியோ பகவான் திப்ரேவால் இடம்பெற்றுள்ளார்.[3] இலண்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனை உட்பட இலண்டனில் உள்ள பல மருத்துவமனைகளுடன் தொடர்புடையவராகவும் ஆலோசகராகவும் இவர் உள்ளார்.[4] மேலும் இவர் கொல்கத்தாவில் உள்ள மேம்பட்ட மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு வழிகாட்டியாகவும் தொடர்பு கொண்டுள்ளார்.[5] இலண்டனைத் தளமாகக் கொண்ட அயல்வாழ் இந்தியர் நிறுவனம் என்ற இங்கிலாந்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்களின் அமைப்பானது, 2004 ஆம் ஆண்டில் இவருக்கு இந்தியாவின் பெருமைக்கான நபர் என்ற தங்க விருதை வழங்கியது. இந்திய அரசு, 2007 ஆம் ஆண்டில், மருத்துவத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, நாட்டின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[1] The Government of India awarded him the fourth highest civilian honour of the பத்மசிறீ, in 2007, for his contributions to Medicine.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "NRI Awards Banquet 2004 at Radisson Portman Hotel". India Link. 2004. பார்க்கப்பட்ட நாள் December 27, 2015.
  2. "View IMR Details". Medical Council of India. 2015. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 27, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Marquis Who's Who". Marquis Who's Who. 2015. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 27, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Doctoralia profile". Doctoralia. 2015. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 27, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "AMRI to set up new Multi-Discipline Super Specialty Medicare". One India. 21 April 2007. பார்க்கப்பட்ட நாள் December 27, 2015.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோ_பகவான்_திப்ரேவால்&oldid=4109553" இலிருந்து மீள்விக்கப்பட்டது