சிரக்கூசாவின் முதலாம் தியோனீசியசு

சிசிலியன் கொடுங்கோலன்

முதலாம் தியோனீசியசு அல்லது மூத்த தியோனீசியசு (கி.மு. c.432-367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளர் ஆவார். இவர் சிசிலி மற்றும் தெற்கு இத்தாலியில் பல நகரங்களை கைப்பற்றினார், சிசிலியில் கார்தேசின் செல்வாக்கை எதிர்த்தார். மேலும் மேற்கு கிரேக்க குடியேற்றங்களில் சிரக்கூசாவை மிகவும் சக்திவாய்ந்தத ஒன்றாக மாற்றினார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிக்கு எடுத்துகாட்டாக பழங்காலத்தில் கருதப்பட்டார். [1]

Guillaume Rouillé 's Promptuarii Iconum Insigniorum இலிருந்து முதலாம் தியோனீசியசு

மூத்த தியோனீசியசின் துவக்ககால வாழ்க்கை

தொகு

தியோனீசியசு அரசு அலுவலகத்தில் எழுத்தராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். [1] கிமு 409 இல் தொடங்கிய கார்தேசுக்கு எதிரான போரில் இவர் செய்த சாதனைகள் காரணமாக, கிமு 406 இல் இவர் உச்ச இராணுவத் தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் இவர் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி சர்வாதிகாரியாக ஆனார். [2] இவர் அரிஸ்டோமாச் என்பவரை மணந்தார், அவருக்கு அரேட் என்ற மகள் இருந்தாள். இவர் அதே நேரத்தில் லோக்ரிசின் டோரிசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகனாக சிரக்கூசாவின் இரண்டாம் தியோனிசியஸ் பிறந்தார்.

கூலிப்படை மற்றும் எதேச்சதிகாரம்

தொகு

தியோனீசியசின் நபர்மீது ஒரு தவறான தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு இவரது நபரைக் காக்க 600 கூலிப்படையினர் இவருக்கு வழங்கப்பட்டனர். இதன் பிறகு தியோனீசியசின் கொடுங்கோன்மை எழுச்சி பெறத் தொடங்கியது. இவர் இந்த காவலர்களை ஆயிரமாக அதிகரித்துக் கொண்டார். படிப்படியாக தனது அதிகாரத்தை பலப்படுத்திய பிறகு, இவர் ஒரு சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் பழைய கூலிப்படையினரைப் பணியமர்த்தினார். அவர்கள் பெரும்பாலும் சிலேரியோய்களாக இருந்தனர். இவர் தனது கூலிப்படையை காவல்படை சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் திணித்தார். சிரக்கூசாவில் சனநாயகம் முடிந்துவிட்டது என்பதை இந்தச் செயல் தெளிவாக்கியது. கொடுங்கோன்மையை தத்துவ ரீதியாக எதிர்த்தவர்களால் கி.மு. 403 ஆம் ஆண்டிலேயே தியோனிசியசின் நிலை அச்சுறுத்தப்பட்டது. கடந்த காலத்தில் கொரிந்து முதல் ஏதென்ஸ் வரையிலான கொடுங்கோலர்களை பதவி நீக்கம் செய்த எசுபார்த்தா தியோனீசியசு மற்றும் அவரது எதேச்சதிகாரத்தை தடுக்கவில்லை. உண்மையில், வரலாற்றாசிரியர் டியோடோரசு சிக்குலசின் கூற்றுப்படி, இருதரப்புக்கும் இடையிலான மிகவும் நேர்மறையான உறவு நீடித்தது.

எசுபார்த்தாவின் அதிகாரத்தின் கீழ் உள்ள நிலங்களில் இருந்து கூலிப்படையினராக கட்டாய ஆள் சேர்ப்பு மூலம் சேர்த்துக்கொள்ள சிறப்புரிமையையும் தியோனீசியசு பெற்றார். தியோனீசியசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் நான்காம் நூற்றாண்டு கிரேக்க நாடுகளில் ஒரு தொடர்ச்சியான விதிமுறையாக ஆனது. கூலிப்படைகளின் பரவலும் ஏற்பட்டது. கூலிப்படையினரும் கொடுங்கோலனும் கைகோர்த்துச் செயல்பட்டனர். எடுத்துக்காட்டாக, "சர்வாதிகாரிகளின் பாதுகாப்பு முற்றிலும் கூலிப்படையினரின் விசுவாசம் மற்றும் சக்தியை ஆதாரமாக கொண்டுள்ளது" என்று பாலிபியஸ் குறிப்பிட்டார். [3] முழுமையான அரசாட்சிக்கு சில வகையான "பாதுகாவலர்" (அதாவது ஒரு தனிப்பட்ட இராணுவம்) தேவை என்று அரிசுட்டாட்டில் [4] மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரிக்கு உகந்த எண்ணிக்கையிலான தொழில்முறை வீரர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் சர்வாதிகாரியின் சக்தியைக் குறைவாகமதிக்க உட்படுத்துவார்கள், அதே சமயம் பலர் இருந்தால் காவல்துறையையே அச்சுறுத்துவார்கள். தியோனீசியஸ் தனது ஆட்சியின் போது அதிகமான "பாதுகாவலர்களை" கட்டாய ஆளெடுப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சைராகஸ் மக்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் தத்துவவாதி குறிப்பிடுகிறார். [4]

இறப்பு

தொகு

சில ஆதாரங்களின்படி, ஏதென்ஸில் நடந்த லீனாயா திருவிழாவில் நடந்த ஒரு போட்டியில், ஒரு பரிசை வென்ற பிறகு, இவர் மிகவும் உற்சாகமாக குடித்து இறந்தார். [5] கிமு 367 இல் இவரது நாடகத்தின் வெற்றியைப் பற்றி அறிந்த சிறிது நேரத்திலேயே அவர் இயற்கையான காரணங்களால் இறந்ததாக மற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.  மற்றவர்களின் கூற்றுப்படி, இவருக்குப் பிறகு சிரக்கூசாவின் ஆட்சியாளரான இவரது மகன் இளைய தியோனீசியசின் தூண்டுதலின் பேரில் இவரது மருத்துவர்களால் இவருக்கு தூக்க மருந்து அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டது. இதேபோன்ற கோட்பாடு, ஜஸ்டினால் முன்மொழியப்பட்டது, டியோனீசியஸ் "தொடர்ச்சியான போரால் தோற்கடிக்கப்பட்டார், இறுதியாக அவரது சொந்த உறவினர்களின் சதியால் கொல்லப்பட்டார்" என்று கூறினார். [6]

இவரது வாழ்க்கை பிலிஸ்டஸால் எழுதப்பட்டது. [1]

அறிவுசார் சுவைகள்

தொகு

ஏதென்சின் சர்வாதிகாரி பிசிஸ்ட்ராடசைப் போலவே, தியோனீசியசும் வரலாற்றாசிரியர்கள் ஃபிலிஸ்டஸ், கவிஞர் பிலோக்செனசு மற்றும் தத்துவஞானி பிளேட்டோ போன்ற இலக்கியவாதிகளை விரும்பினார், ஆனால் அவர்களை மிகவும் மனம் போன போக்கில் முறையில் நடத்தினார்.[1] தியோடோரசு சிகுலசு தனது பிப்லியோதேகா வரலாற்றில் துயோனிசியசு பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒருமுறை தியோனீசியசின் கவிதைகளைப் பற்றி ஒரு மோசமான கருத்தை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டு குவாரிகளுக்கு அனுப்பப்பட்டார். அடுத்த நாள், இவர் தன் நண்பர்களின் வேண்டுகோளின் காரணமாக பிலோக்சைனசை விடுவித்தார். மேலும் மற்றொரு கவிதை வாசிப்புக்காக கவிஞரை இவர் முன் அழைத்து வரப்பட்டார். தியோனீசியசு தனது சொந்த படைப்பை வாசித்தார், பார்வையாளர்கள் கைதட்டினர். எப்படி உள்ளது பிடித்திருக்கிறதா என்று பிலோக்செனசிடம் கேட்டபோது, கவிஞர் காவலர்களிடம் திரும்பி பார்த்து, "என்னை மீண்டும் குவாரிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.[7] புளூட்டாக் தனது ஆன் தி பார்ச்சூன் ஆஃப் அலெக்சாண்டரில் இந்தக் கதையின் ஒரு பதிப்பை விவரிக்கிறார்.[8]

இவர் தன்னை ஒரு எழுத்தாளராகவும், இலக்கியத்தின் புரவலராகவும் இவர் காட்டிக்கொண்டார்; இவரது கவிதைகள், பிலோக்சானசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால் ஏதென்சில் உள்ள லீனியாவில் ஹெக்டரின் மீட்புக்கான சோகத்திற்கான பரிசைப் பெற்றதால், இவர் மிகவும் உற்சாகமடைந்தார், சில ஆதாரங்களின்படி, இவர் உற்சாக மிகுதியால் குடித்து அதனால் மரணம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மரபு

தொகு

தியோனீசியஸ் கிரேக்க மற்றும் ஐரோப்பிய வரலாற்றில் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். சிசிலிக்கான கிரேக்கர்களுக்கும் கார்தேசுக்கும் இடையிலான போராட்டத்தில் இவர் ஒரு வெற்றியாளராக இருந்தார். இவர் சைராகுசை கிரேக்க உலகின் மிகவும் சக்திவாய்ந்த நகரமாக மாற்றினார். மேலும் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவியிருக்கும் பேரரசின் அமைவிடமாக மாற்றினார். இந்த பேரரசு பெயரளவில் ஒரு அரசியலமைப்பு குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்க பேரரசு ஆகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் அவருக்கு அப்பால் அகஸ்டசின் சாதனைகளை முன்னறிவித்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இந்த பிற்கால ஆட்சியாளர்களை முன்னறிவித்தார். மேலும் இவர் முற்றுகை இயந்திரங்கள் போன்ற இராணுவ தொழில் நுட்பங்களில் புதுமைகளை உருவாக்கினார். இது பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் பிற்கால தளபதிகளின் கீழ் போரின் நிலையான அம்சமாக மாறியது.

சைராகஸ் சுவர்கள்

தொகு

கிமு 402 இல், தியோனீசியசு சிராகுசை சுற்றி சுற்றுச் சுவர்களைக் கட்டத் தொடங்கினார். அதில் கவனத்துற்குரியது யூரியாலஸ் கோட்டை ஆகும். அது சைராகுசின் வடமேற்கில் உள்ள பீடபூமியைப் பாதுகாத்தது, அதன் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. கிமு 397 இல் சுவர்கள் முடிக்கப்பட்டன. அவை பின்வரும் பண்புகளைக் கொண்டிருந்தன:

 • நீளம்: 27 கிலோமீட்டர்
 • அடிப்பகுதியின் அகலம்: 3.3 மீ முதல் 5.35 மீ
 • சுற்றுவட்டத்தில் அறியப்பட்ட கோபுரங்களின் எண்ணிக்கை: 14 (யூரியாலோஸ் உட்பட)
 • மிகப்பெரிய கோபுரம்: 8.5 மீ x 8.5 மீ
 • ஆழமான பள்ளம் (யூரியாலோஸ் கோட்டையில்): 9 மீ

இவ்வளவு பெரிய கோட்டையை கட்டுவது என்பது 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 300 டன் கற்களை நிறுவுவதாக இருக்கும். [9]

இதையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Dionysius". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. (1911). Cambridge University Press. 
 2. The Houghton Mifflin Dictionary of Biography. Houghton Mifflin. 2003. p. 440. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-25210-X.
 3. Polybius 11.13
 4. 4.0 4.1 Aristotle Politics 1286b28-40
 5. Chisholm 1911.
 6. "Justin: Epitome of the Philippic History of Pompeius Trogus, Book 20". www.forumromanum.org. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
 7. The Library of History of Diodorus Siculus, Book XV, Chapter 6. Loeb Classical Library (1935)
 8. On the Fortune of Alexander, Second Oration, Chapter 1. Loeb Classical Library (1935)
 9. Chris Scarre, ed. (1999). The Seventy Wonders of the Ancient World. Thames and Hudson. pp. 210–211.

வெளி இணைப்புகள்

தொகு