சிரத்தா கபூர்

இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி

சிரத்தா கபூர் (Shraddha Kapoor) (பிறப்பு 3 மார்ச் 1987) இந்தி படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார் . இவர் இந்தி நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். 2010ஆம் ஆண்டு தீன் பத்தி என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தனது நடிப்பு தொழிலை தொடங்கினார். இளம் வயதினர் நாடகத்திரைப்படமான லவ் கா தி எண்ட் (2011) திரைப்படத்தில் முதன்முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிரத்தா கபூர்
2017 இல் ஒரு விழாவில்
பிறப்பு3 மார்ச்சு 1987 (1987-03-03) (அகவை 37)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகை
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்பொழுது வரை

கபூர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற காதல் திரைப்படமான ஆஷ்கி 2 (2013) இல் ஒரு பாடகராக நடித்ததற்கு பரவலான அங்கீகாரம் பெற்றார். அதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . அடுத்த வருடத்தில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் துயர நாடகமான அம்லட்டின் தழுவலாக விசால் பரத்வாஜின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடக திரைப்படமான ஹைடர் (2014) இல் நடித்தார். ஓபிலியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாத்திரத்தை அவர் சித்தரித்தார். சிரத்தா, காதல் திரைப்படமான ஏக் வில்லன் (2014), நடன திரைப்படமான ஏபிசி 2 (2015) மற்றும் அதிரடி திரைப்படமான பாக்கி (2016) ஆகியவற்றில் நடித்தார். இவையனைத்தும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[2][3] பின்னர் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வணிகரீதியாக தோல்வியுற்று வந்தது. அதன்பின் நகைச்சுவை திகில் திரைப்படமான ஸ்திரி (2018) திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவர் நடித்த படங்களிலேயே வியாபார ரீதியில் அதிக வெற்றி பெற்றது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு
 
தந்தை சக்தி கபூருடன் சிரத்தா கபூர். சிரத்தா நடித்த முதல் படத்தில் அவரது தந்தை ஒரு கௌவர வேடத்தில் தோன்றினார்.

கபூர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தாய் மராத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4] சிரத்தா சிறுமியாக இருந்தபொழுது அடிக்கடி சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக கூறினார்.[5]

சிரத்தாவின் தந்தை சக்தி கபூர், தாய் சிவாங்கி கபூர். மூத்த சகோதரர் சித்தன்த் கபூர் , அவரது இரண்டு அத்தை பத்மினி கோலாபுரே மற்றும் தேஜாஸ்வினி கோலாப்பரே ஆகியோர் ஆவர்.

 
2016 இல் பாக்கி என்ற இந்தி திரைப்படத்திற்கான நிகழ்ச்சியில்

குறிப்புகள்

தொகு
  1. "Happy Birthday Shraddha Kapoor: Rare childhood pics of ‘Aashiqui’ girl". The Indian Express. 3 March 2016 இம் மூலத்தில் இருந்து 14 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. http://indianexpress.com/photos/entertainment-gallery/happy-birthday-shraddha-kapoor-rare-childhood-pics-of-aashiqui-girl-2/2/. பார்த்த நாள்: 13 November 2016. 
  2. "Bollywood Box Office: Tiger Shroff And Shraddha Kapoor A Hot Item in 'Baaghi'". https://www.forbes.com/sites/dongroves/2016/05/01/bollywood-box-office-tiger-shroff-and-shraddha-kapoor-a-hot-item-in-baaghi/#796b5c8bf7c4. பார்த்த நாள்: 1 May 2016. 
  3. "Kangana Ranaut, Deepika Padukone, Shraddha Kapoor, Other Top 5 Actresses of 2015 So Far". ibtimes.co.in. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  4. Priya Gupta (21 April 2013). "I was most upset with the way people were talking about my dad: Shraddha". பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  5. Anuradha Choudhary (7 July 2015). "Stealing beauty – Shraddha Kapoor shimmies her way to the top". பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_கபூர்&oldid=2701195" இலிருந்து மீள்விக்கப்பட்டது