சிராமலை அந்தாதி

சிராமலை அந்தாதி என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வேம்பையர் கோன் நாராயணன் என்பவர் இதன் ஆசிரியர். இது மண்டலித்து வரும் அந்தாதி நூல். 102 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் – எடுத்துக்காட்டு [1]
மெல்லிய செந்தமிழ் மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டும் எனச்
சொல்லிய கோவிற்கு அருள் செய்தவன் கழலும் முகிலை
வல்லிய மால் களிறு என்று தன் வாள் உகிரால் கதுவச்
செல் விழிச் சாரல் சிராமலை மேய திருவடியே.


கட்டளைக் கலித்துறை:


மெல்லிய செந்தமிழ் மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச்

சொல்லிய கோவிற்(கு) அருள்செய் தவன்கழ லும்முகிலை

வல்லிய மால்களி(று) என்றுதன் வாளுகி ரால்கதுவச்

செல்விழிச் சாரல் சிராமலை மேய திருவடியே.


எழுத்துக் கணக்கை உடைய கலித்துறை என்று பொருள்.

அடிதோறும் ஐந்து சீர்களை உடையது. ஒவ்வோரடியும் தனித்தனியே வெண்டளை அமைய வேண்டும்.

ஈற்றுச் சீர் மட்டும் விளங்காய்ச் சீராகி, ஏகாரத்தில் முடியும். (இடையில் விளங்காய்ச் சீர் வராது.)

இந்த இலக்கணம் அமைந்தால் ஒவ்வோரடியிலும் ஒற்றெழுத்துகளை விட்டு எண்ணிப் பார்த்தால்,

நேரசையில் தொடங்கினால் பதினாறு எழுத்துக்களும்,

நிரையசையில் தொடங்கினால் பதினேழு எழுத்துக்களும் இருக்கும்.

இந்தக் கணக்குத் தவறவே தவறாது.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாதாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பாடல் பொருள் நோக்கில் சொல் பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராமலை_அந்தாதி&oldid=2778598" இலிருந்து மீள்விக்கப்பட்டது