சிரியசு
சிரியசு என்பது இரவு வானில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பொலிவு மிக்கது. தோற்ற ஒளியளவு −1.46[1] கொண்ட இவ்விண்மீன், கானிசு மேஜர் என்ற விண்மீன் தொகுதியின் பொலிவுமிக்க விண்மீனாகும் ( Canis Major)[2]. ஓரியன் விண்மீன் தொகுதிக்கு அருகில் காணப்படும்[3] இது, இரும விண்மீன் அமைப்பின் ஓர் அங்கமாகும். சிரியசு A என்றும் அழைக்கப்படும் இவ்விண்மீனுடன் சேர்ந்து காணப்படும் மற்றொரு விண்மீனான சிரியசு B, ஒரு வெண்குறுளை மீனாகும்[4]. சிரியசு Bன் அளவு புவியைக் காட்டிலும் சிறியதாக இருப்பதால், திறன் வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியுடன் மட்டுமே இதைக் காண இயலும்[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sirius". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
- ↑ "Sirius: Brightest Star in Earth's Night Sky". space.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
- ↑ "Orion's Belt points to Sirius on September mornings". earthsky.org. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.
- ↑ "The Dog Star, Sirius A, and its tiny companion". esahubble. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
- ↑ "How to see Sirius B". earthsky. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.