சிரியானி அமரசேன
This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (ஏப்ரல் 2019) |
கலசுரி [1] சிரியானி அமரசேன (sriyani amarsena) இலங்கையைச் சேர்ந்த தயாரிப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் திரைப்படங்களான கொலு ஹடவத்த, தேச நிசா மற்றும் அகசின் பொலவத ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.[2]
சிரியானி அமரசேன | |
---|---|
பிறப்பு | பலகும்பர ஹேரத் முதியன்சலாகே சிரியானி வீரகோன் குமரிஹாமி 14 சூன் 1944 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அறியப்படுவது | நடிகை மற்றும் தயாரிப்பாளர் |
ஐம்பதுக்கும் மேற்பட்ட சிங்கள திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 1993 ஆம் ஆண்டு கலுகெவ திரைப்படத்திற்காக சரசவிய விருதை பெற்றார்.[3] முன்னால் பத்திரிகையாளர் ஆர்தர். யூ. அமரசேன என்பவரை இவர் திருமணம் முடித்தார்.[4][5]
வாழ்க்கை
தொகுசிரியானி அமரசேன 1944 ஆம் ஆண்டு பிறந்தார். பலகும்பர ஹேரத் முதியன்சலாகே சிரியானி வீரகோன் குமரிஹாமி என்பது இவரது முழுப் பெயராகும். சிரியானி அமரசேன என்ற பெயரால் அறியப்படுகின்றார். சிரியானி தனது ஆரம்பக் கல்வியை மீதொடமுல்ல கல்லூரியிலும் பின்பு மூசயொஸ் கல்லூரியிலும் மற்றும் கொழும்பில் உள்ள கௌதமி மகளிர் வித்தியாலயத்திலும் கற்றார். இவர் பாடசாலையில் கற்கும் போதே ஹதர பீரி கதாவ மற்றும் கொஹேத யன்னே ருக்மணி ஆகிய நாடகங்களில் நடித்திருக்கின்றார்.[6]
பகனசோமா ஹெட்டியாரச்சி இயக்கிய விங்ஸ் ஓவர் என்ற திரைப்படமே இவரது முதல் திரைப்படம் ஆகும். பின்பு டி. பி. நிகல் சின்கா இயக்கிய கெடி கதாவ என்ற குறும்படத்தில் நடித்தார். சிரியானி அமரசேன நடித்த முதல் மேடை நாடகம் பி. டி. எல். பெரேராவின் தம்மன்னா என்ற மேடை நாடகமாகும். குணவர்த்தனேயின் நாரிபன என்ற மேடை நாடகத்தில் தயானந்தவின் புதல்வியாக நடித்தமையால் புகழ்பெற்றார். ஹிதா ஹெந்தா அம்மன்டி என்ட் வெஸ் முஹுனு என்ற மேடை நாடகத்திலும் பாத்திரமேற்றிருக்கிறார்.[6]
சிரியானி அமரசேன 1968 ஆம் ஆண்டு கொலு ஹடவத என்ற வெற்றித் திரைப்படத்தில் நடித்தமையால் சினிமாத்துறையில் பிரபலமானார். தேச நிசா, அகசின் பொலவட, விகாரயா என்ட் மக கெதர ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கல்யாணி கங்கா மற்றும் ரத்தரங் ஆகிய திரைப்படங்களில் நடித்தமை நேர்மறை விமர்சனங்களை பெற்றுத்தந்தது.[6]
திரைப்படங்கள்
தொகு- 1968 - கொலு ஹதவத அஸ் சம்பா
- 1970 - பெனவா நிதா
- 1970 - பிரியங்கா
- 1971 - ஹதர தெனம சூரயோ
- 1971 - சீயே நொதுவ
- 1973 - அபராதய சக தடுவோம
- 1974 - சாந்தி
- 1974 - சாகரிகா
- 1974 - சிகசுனா
- 1974 - கல்யாணி கங்கா
- 1975 - ஒபய் மமய்
- 1975 - தரங்க
- 1975 - லஸ்ஸன கெல்லே
- 1975 - தேச நிசா அஸ் சுந்தரி
- 1975 - ரத்தரன் அம்மா அஸ் நந்தா
- 1976 - மங்கலா
- 1976 - ரன் திலக
- 1977 - நிவன கின்னா
- 1977 - யளா இபதே
- 1977 - சிகுரு தசவ
- 1977 - ஹிதுவொத் ஹிதுவமி
- 1978 - அஸ்ஹ தசின்
- 1978 - அகசின் பொலவட அஸ் வினிதின்
- 1978 - ஹித மிதுரா
- 1978 - குமார குமரியோ
- 1978 - சன்ட வத ரன்தரு
- 1978 - செலி நக வலவ்வோ
- 1978 - வீர புரன் அப்பு
- 1979 - சருங்கலயா
- 1979 - ராஜ கொல்லோ
- 1979 - எக ஹிதா
- 1979 - ரோச மல் துனக்
- 1979 - அக்கே மட அவசரய்
- 1980 - காஞ்சனா
- 1980 - மல் கெகுலு
- 1981 - சூரிய காந்த
- 1981 - சதர பெரனிமிதா
- 1982 - ரகசக் நதி ரகசக்
- 1982 - மக கெதர அஸ் அனுலா
- 1982 - பரமிதா
- 1982 - யஹலு யஹ்லி
- 1983 - ரன் மினி முது
- 1983 - சந்திரா
- 1983 - நிலியகட பென் கலிமி
- 1983 - சுபோதா
- 1984 - பினரே சக சுது பண்டா
- 1984 - மத்தும பண்டார
- 1982 - ஹலோ சயாமா
- 1986 - யலி ஹம்முவென்ன
- 1987 - ரஜ வெடகாரயோ
- 1987 - வீரகயா அஸ் சரோஜினி
- 1987 - அஹ்னிசா
- 1988 - அம்மே ஒப நிசா
- 1988 - அங்குலிமல
- 1988 - சடனா
- 1990 - தேச மல் பிபிலா நடிகை தயாரிப்பாளர்
- 1991 - கொழு முகுது குனாட்டுவ
- 1991 - பம்பர கல்ப்பே
- 1992 - குலகெயா
- 1995 - எதத் சண்டிய அதத் சண்டியா
- 1996 - சபே மிதுரா
- 1997 - தாரன்யா நடிகை தயாரிப்பாளர்
- 1997 - துவட மவக மிஸா
- 1997 - விஜயகரஹானயா
- 2003 - லி கிரி கந்துலு
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.sarasaviya.lk/2017/04/06/?fn=sa17040620 பரணிடப்பட்டது 2018-09-20 at the வந்தவழி இயந்திரம் சரசவிய பார்த்தநாள் 11 சூன் 2017
- ↑ http://www.dailymirror.lk/2007/03/24/life/8.asp Daily news (Sri Lanka) 24-03-2007
- ↑ http://www.nfc.gov.lk/artist/sriyani-amarasena-163/ www.nfc.gov.lk. பார்த்த நாள் 2017-08-27
- ↑ http://www.sarasaviya.lk/2014/11/20/?fn=sa14112010 பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம் சரசவிய. பார்த்த நாள் 20-10-2017
- ↑ http://www.sarasaviya.lk/2017/12/21/?fn=sa1712218 பரணிடப்பட்டது 2018-05-26 at the வந்தவழி இயந்திரம் சரசவிய. பார்த்த நாள் 22-12-2017
- ↑ 6.0 6.1 6.2 http://www.sarasaviya.lk/2011/09/01/_art.asp?fn=sa1109014&pn=05[தொடர்பிழந்த இணைப்பு] சரசவிய. பார்த்தநாள் 17-11-2017
வெளி இணைப்புகள்
தொகு- Sriyani Amarasena's Biography in Sinhala Cinema Database
- Face 2 Face with Sriyani Amarasena
- Journalist cum actress பரணிடப்பட்டது 2016-06-01 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sriyani Amarasena
- Official Website - National Film Corporation of Sri Lanka பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம்