சிரி சந்து ராம்

இந்தியத் தடகள வீரர்

சிரி சந்து ராம் (Siri Chand Ram) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். சந்து ராம் பைராகி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1958 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 1982 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிரி சந்து ராம் 20 கிலோமீட்டர் நடை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்குப் போட்டியிலும் இவர் பங்கேற்றார். 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இவரது தனிப்பட்ட சிறந்த சாதனை 1-27:20 மணியாகும். (1985).இந்திய அரசாங்கம் சிரி சந்து ராமுவிற்கு 1982 ஆம் ஆண்டு அருச்சுனா விருதையும், 1983 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதையும் வழங்கி சிறப்பித்துள்ளது.

கேப்டன் சந்த் ராம் பைராகி
Captain Chand Ram Bairagi
தனிநபர் தகவல்
முழு பெயர்சிரி சந்து ராம்
தேசியம்இந்தியர்
பிறப்பு26 சனவரி 1958 (1958-01-26) (அகவை 66)
ராசானா குர்து, அரியானா, இந்தியா
வசிப்பிடம்அரியானா மாநிலம்
உயரம்5 அடிகள் 10 அங்குலங்கள் (1.78 m)
எடை68 கிலோகிராம்கள் (150 lb)
விளையாட்டு
விளையாட்டு20 கிலோமீட்டர் சாலை நடை
சாதனைகளும் விருதுகளும்
ஒலிம்பிக் இறுதி1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (பங்கேற்பு)
பதக்கத் தகவல்கள்
20 கிலோமீட்டர் நடைப் போட்டி
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 1982 புது தில்லி 20 கிலோமீட்டர் நடைப் போட்டி

மேற்கோள்கள் தொகு

  1. "Olympedia – Siri Chand Ram", www.olympedia.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-26
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரி_சந்து_ராம்&oldid=3876262" இலிருந்து மீள்விக்கப்பட்டது