சிரைக் கல் (Phlebolith) என்பது சிரைக்குள் கால்சியப் படிவுகளால் உருவாகும் ஒரு சிறிய, வட்டவடிவமான, கல்லினைக் குறிக்கும். இடுப்புப் பகுதியின் கீழ் பகுதிச் சிரைகளில் இவை பொதுவாகக் காணப்படுகிறது. இவை பொதுவாக மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. இடுப்புப் பகுதியின் கீழ் பகுதியில் சிரைக் கல் உள்ளபோது சில நேரங்களில் சிறுநீர்க் குழாய்களில் உள்ள சிறுநீரகக் கற்களிலிருந்து எக்ஸ்ரே மூலமாக வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகும்.[1] கடினமான பொருளால் சிரை அடைக்கப்படும்போது குருதி ஓட்டம் தடைபட்டு அதற்குக் கீழ் உள்ள சிரைகள் சுருண்டும், நெளிந்தும், வீங்கியும் காணப்படும். சில சமயங்களில் தசை அழுகுதலும் ஏற்பட வாய்ப்புண்டு. இடுப்பு பகுதியிலுள்ள சிரைக்கற்கள் சுமார் 44.2% மக்களிடம் காணப்படுகிறது. ஆண்களை விட (37.3%) பெண்களில் (50.1%) இவை அதிகம் காணப்படுகிறது. சிரைக்கற்களின் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இவை இடுப்புப் பகுதியின் வலது பக்கத்தை விட இடதுபுறத்தில் அடிக்கடி தோன்றுகின்றன.[2]. சிரைக்கற்கள் இடுப்புப் பகுதிக்கு வெளியே சுமார் 2% மக்கள் தொகையில் காணப்படுகின்றன.[3]

காரணங்கள்

தொகு

சிரையில் குருதி உறைவு, அழற்சியாலோ உயிரிகளாலோ ஏற்படும். கால்சியம் கலப்பதால் உறைதல் கடினமாகி, கல் நிலையை அடைகிறது. இந்நோய், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

மருத்துவ முறை

தொகு

இந்நோய் சாதாரணமாக கால் சிரைகளிலேயே வரும். காலை உயரமாகத் தூக்கி வைத்துக் கொண்டு படுக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. சிரை அழற்சியும், தசை அழகுதலும் வராமல் தடுக்க உயிர் எதிர் மருந்துகள் ஊசி மூலமாகவோ அல்லது வாய் வழியாகவோ செலுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரைக்_கல்&oldid=3862704" இலிருந்து மீள்விக்கப்பட்டது